பாப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பசிபிக் கடல் பகுதியில் உள்ள அந்த நாட்டின் த்ரோன் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9ஆகப் பதிவானது. இதையடுத்து பசிபிக் கடலை ஒட்டியுள்ள பாப்புவா நியூகினியா கடற்கரைப் பகுதியை மிகப்பெரிய சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக பசிபிக் பகுதி சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. சுனாமி அலைகள் ஒரு மீட்டர் முதல் 3 மீட்டர்கள் வரை உயர்ந்து கரையைத் தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
பதிவு செய்த நாள் : December 17, 2016 - 06:22 PM