திங்கள், 5 டிசம்பர், 2016

*சிப்பி & பால் காளான் வளர்ப்பு*


சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம்.
இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம்.
இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான்.
பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும்.
சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம்.
வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும்.
குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும்.
ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும்.
பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்''
திட்ட அறிக்கை :
1)தேவையான இடம் 10×10 ரூம் அல்லது குடில் [சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2)காளான் விதை
3)பாலிதீன் பை
4)வைகோல் [நெல்லம் புள் - காய்ந்தது ]
ஒரு காளான் பை (12×24 இன்ச் )
செய்ய தேவையான செலவு ரூ .40 முதல்
ரூ .50 [1.பாலிதீன் பை ,
2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ]
அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும் }
[ 18 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில் அடுத்த அடுத்த அறுவடை ]
200 கிராம் பக்கெட் காளான் சில்லரை விற்பனை விலை ரூ.50 முதல் ரூ.60.
------>>( 1 கிலோ 250 முதல் 300 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
---->>சில்லறையாக விற்கும்பொழுது லாபம் ரூ 450( ஒரு காளான் பைக்கு )
அதவாது ,
2 கிலோ
[ஒரு காளான் பையில் ] சில்லரை விலை -->ரூ 500
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
லாபம் = 500-50= ரூ 450( ஒரு காளான் பைக்கு )
200 கிராம் பக்கெட் காளான் மொத்த விலை ரூ.27 முதல் ரூ.30 .
------>>( 1 கிலோ ரூ 135 முதல் ரூ 150 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
------>> மொத்தமாக விற்கும்பொழுது லாபம் ரூ 220 ( ஒரு காளான் பைக்கு )
அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] மொத்த விலை -->ரூ 270
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
லாபம் = 270-50= ரூ 220( ஒரு காளான் பைக்கு )
பண்ணை அமைந்துள்ள இடங்கள்
1)தருமபுரி ,பாரதிபுரம்
2)மேட்டூர் ,நெரிஞ்சிப்பேட்டை
3)ஈரோடு,பள்ளிபாளையம் .
நேரடியாக பண்ணையை பார்வையிடலாம். பண்ணையில்
பயிற்சி பெற பயிற்சிகட்டணம் :ரூ 1500(பயிற்சி சான்றிதழுடன்)
மேலே குறிப்பிட்ட பண்ணைகளில் எந்த பண்ணை உங்களுக்கு அருகில் இருக்கிறதோ அந்த பண்ணையில் நீங்கள் பயிற்சி எடுத்து கொள்ளலாம்