புதன், 21 டிசம்பர், 2016

மின்னணு பரிவர்த்தனை நடைமுறைப்படுத்த முடியாது; விளைவை சந்திக்கத் தயார் – புதுவை முதல்வர் நாராயணசாமி……

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, அப்போது ”  மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை செயல்படுத்த புதுச்சேரி முன்னோடி மாநிலமாக செயல்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது. ஆனால் இதற்கான எந்த கட்டமைப்பு வசதியும் புதுச்சேரியில் இல்லை.

 புதுச்சேரியில் கிராமப்பகுதியில் வங்கிகள் ஏடிஎம்கள் இல்லை. பெரும்பாலான கடைகளில் பண அட்டை பயன்படுத்தும் ஸ்வைப் இயந்திரம் இல்லை.

எனவே பண அட்டை மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதை முழுமையாக நிறைவேற்ற முடியாது.படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும் என முடிவெடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.


இப்பிரச்னை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசினேன். புதுச்சேரி மாநிலத்தில் நீங்கள் சொல்லும் காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற முடியாது. எங்களுக்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவித்து விட்டேன். இதனால் வரும் எந்த விளைவாக இருந்தாலும் சந்திக்க தயார் ” என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

Related Posts:

  • Hadis நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது, (அதற்காக) தொழுதார்கள். "அல்லாஹ்வின்தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்கமுயன்று விட்டு… Read More
  • It CAN(cer) save ! ன ஒரு அருமருந்து. வந்திருக்கிறது...It CAN(cer) save ! … Read More
  • தற்காலிகமாக மெயின் ரோட்டில் உள்ள பழைய ஹைஸ்கூலுக்கு மாற்றப்பட்டுள்ளது 12/02/2015 முக்கண்ணாமலைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி பல கட்ட பிரச்சனைகளுக்கு பின் தற்காலிகமாக மெயின் ரோட்டில் உள்ள பழைய ஹைஸ்கூலுக்கு மாற்றப்பட… Read More
  • hadis இன் ஷா அல்லாஹ், நாமும் இதை பின்பற்றுவோம்.. … Read More
  • நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...?? கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண… Read More