புதன், 7 டிசம்பர், 2016

’கட்டுக்கடங்கா துயரம்’... தமிழக மக்களை நெகிழ வைத்த கேரள அரசின் நாளிதழ் விளம்பரம்

Kerala news paperl

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரள அரசு, நாளிதழ்களில் அளித்துள்ள விளம்பரம் தமிழக மக்களை நெகிழ வைத்துள்ளது.
தமிழகத்தில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களிலும் கேரள அரசு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கையில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருப்பது போன்ற படமும், ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு’ என்ற திருக்குறளும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. நீங்கா நினைவுகளுடன் அஞ்சலி என்றும் கட்டுக்கடங்காத துயரம் என்ற வாசகங்கள் வழியே கேரள அரசு தங்களின் துயரத்தை பதிவிட்டுள்ளது.