தேனி மாவட்டத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த சுரேஷ் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில் வடுகப்பட்டி பகுதியில் செவிலியராகப் பணியாற்றி வரும் பெண் ஒருவர் உடைமாற்றும் நேரத்தில், சுரேஷ் அவரை கைப்பேசியில் படம் எடுத்ததாகவும், இதை அந்தப் பெண்ணிடம் காட்டி மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் தென்கரைகாவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மணிகண்டன் புகார் அளித்தார். இதனையடுத்து சுரேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் சுரேஷ் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
பதிவு செய்த நாள் : December 22, 2016 - 12:51 PM