சென்னை மக்கா பள்ளியின் இமாமாக இருந்த சம்சுத்தீன் காசிமி அப்பள்ளி நிர்வாகத்தால் நீக்கப்பட்டு வேறொரு இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை இரு தரப்பும் சொல்லவில்லை. எனவே அவரது நீக்கம் குறித்து பலவாறாக சொல்லப்படுவதை பரப்ப வேண்டாம். நமது இலக்கிலிருந்து நம்மை திசை திருப்பும் இது போன்ற வேலைகளில் ஈடுபடாமல் ஆக்கப் பூர்வமான பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சம்சுத்தீன் காசிமியின் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டு உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் நாம் சொல்வது சத்தியம் என்பதை நிரூபிக்க அதை ஆதரமாக ஆக்கக் கூடாது. நாம் சொல்லும் கொள்கை குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டது என்பதை வைத்துத்தான் நமது பிரச்சாரம் அமைய வேண்டும். அவரது நடத்தை சரி இல்லை என்பது நமது கொள்கை சரி என்பதைக் காட்ட உதவாது.
நம் ஜமாஅத் மீது அவர் அவதூறு சொன்ன போது அதற்கு பதிலளிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால் அவரது குற்றச் சாட்டை மறுப்பதுடன் அவரது தகுதியையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். அது போன்ற தேவை எதுவும் இப்போது இல்லாததால் அவரைப் பற்றிய தனிப்பட்ட விஷயத்தை ஆதாரமின்றி பரப்ப வேண்டாம் என்று அன்புடன் கொள்கைச் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்