ஞாயிறு, 1 ஜனவரி, 2017

பழைய போன்களில் இனி வாட்ஸ் அப் வராது

பிரபல சாட் செயலியாக வலம் வரும் வாட்ஸ் அப் சேவை 2016 வருடத்தின் கடைசி நாளில் சில பழைய மாடல் மொபைல்களில் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 3GS, iOS 4, 4S, 5 மற்றும் 6 ஆகிய இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்களில் இனி வாட்ஸ் அப் சேவை இயங்காது. புதிய படைப்பான iOS 10-இல் மட்டுமே இனி இயங்கும்.
2011 ஆம் ஆண்டு வெளியான அண்ட்ராய்டு 2.1 மற்றும் 2.2 போன்களிலும் வாட்ஸ் அப் இனி இயங்காது. விண்டோஸ் மொபைல்களில் 7 மற்றும் 7.1 போன்களிலும் வாட்ஸ் அப் இயங்காது.