ஞாயிறு, 22 ஜனவரி, 2017

பூனைக் குட்டி வெளியே வந்தது!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போராடி வருகின்றனர். இந்த அறப்போராட்டத்தில் முதன் முதலில் பங்கேற்றவர்களில் ஹிப் ஹாப் ஆதியும் ஒருவர்.

ஆனால் அவர் திடீரென்று இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஹிப் ஹாப் ஆதி வெளியேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்தால் அவருக்கு பாஜகவின் மறைமுக ஆதரவு இருக்கின்றது என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அவரை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



http://www.todayindian.info/2017/01/blog-post_296.html

Related Posts: