வியாழன், 5 ஜனவரி, 2017

உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்!

உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்!
#வாதம் 1:
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று அல்ஹம்து அத்தியாயத்திலேயே உள்ளது. நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழியை எங்களுக்குக் காட்டு என்பதன் அர்த்தம் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரமாம்.
#வாதம் 2:
நபித்தோழர்கள் நபியவர்களால் புடம் போடப்பட்டவர்கள் நபிகளால் தயாரிக்கப்பட்டவர்கள் தவறான கருத்தை சொல்லி விட்டார்கள் என்றால் நபியவர்கள் தமது கடமையில் தவறிவிட்டார்கள் என்று ஆகும். எனவே நபித்தோழர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று நம்பினால் தான் நபியவர்கள் தமது கடமையைச் செய்தார்கள் என்று ஆகும். ஆகவே நபித்தோழர்களைப் பின்பற்றுவது அவசியம் என்பதற்கு இது ஆதாரமாம்.
#வாதம் 3:
முஹாஜிர்களையும் அன்சார்களையும் பின்பற்றியவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று ஒன்பதாவது அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கிறான். இதுவே நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகும்.
#வாதம் 4:
மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் தடுக்கப்படுவோர் சில சஹாபாக்கள் என்று பீஜே சொல்கிறார். ஆனால் சில அறிவிப்புக்களில் என் சஹாபாக்கள் என்பதற்கு பதில் என் உம்மத்துகள் என்று உள்ளது. அந்த அறிவிப்பை பீஜே இருட்டடிப்பு செய்து விட்டார்
என்று ஜாகிர் நாயக் நடத்திய பீஸ் கண்காட்சில் நிகழ்ச்சியில் ஆக்ரோஷமாகவும் வீராவேசமாகவும் உமர் ஷரீப் என்பவர் உரை நிகழ்த்தினார். தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட இயக்கம் என்பதற்கு மேற்கண்ட வாதங்களை வைத்தார்.
இது நடந்த மறுவாரம் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியில் உமர் ஷரீபின் பொய்யையும், மடமையையும் உளுத்துப் போன வாதங்களையும் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பிஜே அவர்கள் பதிலளித்தார்.
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்கு முழுத் தெளிவை அளிக்கும் உரை.

Related Posts: