போராட்டக்களமான மெரினாவில் முத்ல்வர் அறிக்கையை படித்த ஐபிஎஸ் அதிகாரி போராட்டத்தை விலக்கி கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளை நிராகரித்தனர்.
மெரினாவில் போராடும் இளைஞர்களிடையே மீண்டும் பேசினார் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன்.அப்போது பேசிய அவர் தமிழக முதல்வரின் கோரிக்கையாக அவரது அறிக்கையின் முக்கிய பகுதிகளை படித்தார்.
புது டெல்லியில் தங்கை மத்திய அரசின் மிருக வதை தடை சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். மத்திய அரசு அதை குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அதில் குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிப்பார்.
இந்த வரைவு நேற்றே டெல்லியில் தயாரிக்கப்பட்டு உள்துறைக்கு அனுப்பபட்டுள்ளது. அதன் மீது குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிப்பார். இதையடுத்து ஓரிரு நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
அரசு ஜல்லிக்கட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதன் சாராம்சத்தை கொடுத்துள்ளேன். அதன் மீது அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை உணர்ந்து உங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ளவேண்டும் இதை கோரிக்கையாக வைக்கிறேன்.வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
அதற்கு கரகோஷம் தெரிவித்த இளைஞர்கள் போராட்டத்தை விளக்கி கொள்ள முடியாது என மறுத்து விட்டனர். போலீஸ் அதிகாரி கீழே இறங்கியவுடன் ”” வாடி வாசல் திறக்கும் வரை வீடு வாசல் போகமாட்டோம் ”” என திரும்ப திரும்ப கோஷமிட்டனர்.