மோ. கணேசன்
மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ், நாட்டில் பல்வேறு இடங்களில் அப்பேரல் டிரெய்னிங் அண்ட் டிசைன் சென்டர் எனப்படும் ஏடிடிசி வொகேஷனல் இன்ஸ்டிட்யூட்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கிண்டி, எழும்பூர், திருப்பூர் ஆகிய நகரங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சென்னை கிண்டியில் உள்ள பயிற்சி நிலையத்தில் அப்பேரல் மேனுபேக்சரிங் அண்ட் என்டர்பெர்னர்ஷிப், ஃபேஷன் டிசைன் அண்ட் ரீடெல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்புகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் பட்டப்படிப்புச் சான்றிதழை வழங்கும்.
அப்பேரல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி, ஃபேஷன் டிசைன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டிசைன் டெக்னாலஜி, அப்பேரல் பேட்டர்ன் மேக்கிங் அண்ட் கேட் ஆகிய பாடப்பிரிவுகளில் ஓராண்டு கால டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இந்த இரு படிப்புகளுக்கும் கட்டணம் தலா ரூ.52 ஆயிரம்.
பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர விரும்புவோர், குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும்.
அப்பேரல் பேட்டர்ன் மேக்கிங் பேசிக், அப்பேரல் புரடக்ஷன் சூப்பர்விஷன்...
source: new gen media