மாறன்
நமது குறிக்கோளை அடைவது என்பது தங்கச் சுரங்கத்தில் தங்கத்தை வெட்டியெடுப்பது போன்றது. ஒரு அவுன்ஸ் தங்கத்தைப் பெற டன் டன்னாக மண்ணை அகற்றவேண்டும். அப்போது, கவனம் முழுவதும் தங்கத்தின் மீதுதான் இருக்கும். தங்கத்தைத் தேடி எடுக்கத்தான் தோண்டிக்கொண்டே இருப்போமே தவிர, மண்ணைப் பார்க்கமாட்டோம். அதுபோலத்தான் குறிக்கோளை அடைய, நம் கவனம் முழுவதும் அதன்மீது பதிய வேண்டுமே தவிர, சுற்றியுள்ள மணல் மீது அல்ல.
ராபர்ட் புல்டன்தான் முதல் நீராவிப் படகைக் கண்டு பிடித்தார். அப்போது சிலர், இந்தப் படகு ஓடாது என்றனர்.
ஆனால் படகு தண்ணீரை கிழித்துக் கொண்டு சென்றது. ஓடிய படகை நிறுத்தவே முடியாது என்று சிலர் அவநம்பிக்கை தெரிவித்தனர். இந்த மாதிரி எண்ணம் உள்ளவர்கள்தான் நம்மைச் சுற்றியுள்ள மணல். இவர்களை வெளியேற்றினால் தான் நாம் தங்கம் என்ற குறிக்கோளை அடைய முடியும். சில பேர் அடிக்கடி கூறும் வார்த்தைகள்...
இது இப்படி இருந்திருக்கலாம்"
இதை மட்டும் நான் செய்திருந்தால்"
இதுபோன்ற வார்த்தைகளை உங்களுடைய வாழ்க்கையின் அகராதியில் இருந்து எடுத்து விடுங்கள். இதை என்றாவது ஒருநாள் செய்து விடுவேன் என்று கூறுபவர்கள் என்றைக்குமே அந்த வேலையை செய்வதில்லை. அதேபோல் தங்கத்தை அடைய சுரங்கத்தைத் தோண்டுபவர்கள், சோர்ந்து போவதில்லை.
அறிவு என்பது கற்றுக் கொள்வது. திறமை என்பது பெற்றுக்கொள்வது. செயல்திறன் என்பது திறமையை செயல்படுத்துவது. நல்ல மனப்பான்மை இல்லாதவரின் திறன்கள் பயனற்றவை. நம்மிடம் இயற்கையாகவே சில திறன்கள் அமைந்துள்ளன. நாம்தான் அவற்றை உணர்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிட்டுக்குருவியின் அளவு சிறியது. எடையோ மிக மிகக் குறைவு. ஆனால் அதனால் ஒரு வினாடிக்கு...