வெள்ளி, 6 ஜனவரி, 2017

தலித், முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாயாவதி..!

Mayawati l

பகுஜன் சமாஜ் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தலித் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உடனே தேர்தல் வேலைகளை மும்முரமாகத் தொடங்கி விட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
வட உத்தரப்பிரதேச பகுதியைச் சேர்ந்த 20 மாவட்டங்களில் முதற்கட்டமாக 100 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பகுஜன சமாஜ் கட்சி. களமிறக்கப்பட்டுள்ள 100 வேட்பாளர்களின் 54 பேர் தலித் மற்றும் முஸ்லிம் சமுதாய மக்கள். இவ்விரு சமுதாய மக்களும் இப்பகுதியில் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் வாக்குகளை அள்ளும் பொருட்டு பகுஜன் சமாஜ்கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் படி, 18 இடங்களில் தலித் வேட்பாளர்களும், 36 இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 11-ல் தேர்தல் தொடங்கி 7 கட்டங்களாக மார்ச் 8-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

Related Posts: