பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் தகாதமுறையில் சிலர் நடந்துகொண்ட சம்பவத்துக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ள அக்ஷய் குமார், பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தனியாக சென்ற பெண்ணிடமும் மர்ம நபர்கள் தவறான முறையில் நடந்ததை பற்றி அறிந்தவுடன் எனது மனம் வேதனையடைந்தது. இந்த சம்பவத்திற்காக மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் நாம் மனிதர்களாக வாழ வெட்கப்பட வைக்கும். இந்த விவகாரத்தில் விலங்குகள் நம்மை விட சிறந்தவை. பெண்கள் ஆடை அணிவதை மையமாக வைத்து இதுபோன்ற சம்வங்கள் நடப்பதை நியாயப்படுத்துவது சரியில்லை. பெண்கள் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டாம். தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : January 05, 2017 - 03:40 PM