இணையதள வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனம் இந்திய தேசியக்கொடியின் நிறத்தில் மிதியடிகளை விற்பனை வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளிலும் இணையதளம் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. அமேசான் நிறுவனத்தின் கனாடா இணையதளத்தில் இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் மிதியடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அமேசானுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தேசிய கொடிகளின் நிறத்திலும் மிதியடிகள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தொடர் போராட்டம் மற்றும் கடும் விமர்சனங்களைச் சந்தித்த அமேசான், உடனடியாக அந்த பொருட்களை இணையதளத்தில் இருந்து நீக்கியது.
பதிவு செய்த நாள் : January 05, 2017 - 04:54 PM