சனி, 14 ஜனவரி, 2017

செவ்வாய்கிழமை அரசு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளையொட்டி வரும் செவ்வாய்கிழமை 17ம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தா நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள், தமிழக கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 17ம் தேதி அரசு விடுமுறையாக விடப்படும் என்று அறிவித்துள்ளது.