செவ்வாய், 17 ஜனவரி, 2017

என்ன அநியாயம் நடந்தால் நமக்கென்னங்க... ஜெய்ஹிந்த் சொல்லி குடியரசை கொண்டாடுவோம்... அவ்ளோதான்.... டாட்.

கூடங்குளம் மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடினார்கள். வெளிநாட்டுப்பணம் என்று வாய் கூசாமல் சொன்னோம்.
வெளிநாட்டுப்பணமாக இருந்திருந்தால் இப்போது அங்கு அணுமின் நிலையம் செயல்பட்டுக் கொண்டிருக்காது என்பதை வசதியாக மறந்துவிட்டோம்.
பத்தாயிரத்திற்கும் அதிகமான காஷ்மீர் மக்கள் பெல்லட் குண்டுகளால் உடல் உறுப்புகளை இழந்து, நூற்றுக்கணக்கில் உயிரை இழந்து மீதமுள்ள தங்கள் நிம்மதியான வாழ்க்கைக்காக போராடினார்கள். பாகிஸ்தான் ஆதரவு என்று அநியாயமாக சொன்னோம்.
ஆனால் காஷ்மீர் மக்களில் ஒருவர் கையில் கூட இந்திய ராணுவத்திற்கு எதிரான (வெறும் கற்கள்தான் அவர்கள் ஆயுதம்) அழிவாயுதம் இல்லை என்பதை இந்திய அரசே பதிவு செய்ததை எளிதாக கடந்து விட்டோம்.
பணமதிப்பு நீக்க தடையை எதிர்த்து DYFI தோழர்கள் போராட்டம் நடத்தியபோது தோல் உரியுமளவிறகு அடித்து ஆபாசமாக பேசி பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையமே நோட்டீஸ் அனுப்பயதாக விகடன் செய்தி வந்தது.
ஆனால் இந்த கம்யூனிஸ்ளுக்கு வேற வேலை இல்லை என்று சொல்லி கடந்தோம்...
அதிகார வர்க்கத்திற்கு அடங்கிப்போகும் மக்கள் கூட்டம் கிடைத்தால் போதும். அது அலங்காநல்லூர், காஷ்மீர், கூடங்குளம் எதுவானாலும் சரி என்பதை எப்போது புரிந்துகொளளப்போகிறோம்???
சட்டம் தன் கடமையை செய்கிறது என்று அடிமை வசனம் பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி...
உங்கள் சட்டம், பாபர் மசூதி இடிப்பு, குஜராத் வன்முறை, ஜாட் இன வன்முறை, முசாபர் நகர் வன்முறை, குஜ்ஜார் இன வன்முறை, பட்டேல் சமூக வன்முறை, கர்நாடகா காவிரி நீர் தீர்ப்புக்கான வன்முறை, ஜெயலலிதா கைது செய்யப்பட்டதால் நடந்த வன்முறை, கோவையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளில் என்ன செய்தது?
வன்முறை முடிந்து வழக்குப்பதிவு செய்து 25 வருடங்களானாலும் வழக்கு நடத்தும். அதற்குள் குற்றவாளிகள் எல்லாம் பெரிய பதவிகளுக்கு சென்று செத்தும் விடுவார்கள்....
இந்த லட்சணத்தில்தான் மக்களுக்கான எல்லா உரிமைகளையும் வழங்கும் குடியரசு தினத்தை எதிர் நோக்கியிருக்கிறோம்...
என்ன அநியாயம் நடந்தால் நமக்கென்னங்க... ஜெய்ஹிந்த் சொல்லி குடியரசை கொண்டாடுவோம்... அவ்ளோதான்.... டாட்..
--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்--