தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ''லட்சக்கன்றுகள் நடும் லட்சியப் பயணம்'' இனிதே துவக்கம்.
கடந்த மாதம் ஏற்பட்ட ''வர்தா'' புயலின் காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன.
பூமி மழை பெறவும், மனிதனும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழவும் மரம் மிக அவசியமான ஒன்றாகும். இழந்த மரங்களை ஈடு செய்வது என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல் நம் அனைவரின் கடமையாகும்.
எனவே ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுகிற இலக்கை நோக்கிய பயணத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்திருக்கிறது.
அதன் துவக்கமாக எதிர்வரும் 9.01.2017 திங்கட்கிழமை அன்று சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M. முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்.