வியாழன், 19 ஜனவரி, 2017

பெப்ஸி, கோலா பானங்களை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்!

பெப்ஸி, கோலா பானங்களை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்!
சென்னையில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி இளைஞர்கள் பீட்டாவுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் பற்றவைத்த தீ தற்போது கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும்,பீட்டாவிற்கு தடை விதிக்க வலியுறுத்திம் கல்லூரி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
இந்நிலையில், சென்னையை அடுத்த திருவொற்றியூரில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி இளைஞர்கள் பீட்டாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி சிறுவர்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள், பெப்ஸி கொக்கோகோலா உள்ளிட்ட குளிர்பானங்களை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Related Posts: