சனி, 21 ஜனவரி, 2017

நிரந்தர சட்டம் தேவை.. முதல்வரே வந்தாலும் ஜல்லிக்கட்டு நடக்காது.. அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு! தமிழன்டா !

கள நிலவரம் அரசுக்கு எதிராக இருக்கிறது. நாளை காளைகளை அவிழ்த்துவிட மாட்டோம் என்று மாடு வளர்ப்போர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சென்னை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவந்துள்ளன மத்திய, மாநில அரசுகள். ஆனால் நிரந்தரமாக சட்டத்தில் திருத்தம் தேவை என அலங்காநல்லூரில் போராடி வரும் மக்கள் அறிவித்துவிட்டனர். போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய நிர்வாகிகள்,
முதல்வரே வந்தாலும் ஜல்லிக்கட்டு நடக்காது என அறிவித்தனர். இதை வரவேற்று மக்கள் கோஷமிட்டனர்.
நிரந்தர சட்டமே தீர்வு என அலங்காநல்லூர் மக்கள் கோஷமிட்டு வருகிறார்கள். கள நிலவரம் அரசுக்கு எதிராக இருக்கிறது. நாளை காளைகளை அவிழ்த்துவிட மாட்டோம் என்று மாடு வளர்ப்போர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு என்னவாகும் என்ற குழப்பம் நிலவுகிறது.

Related Posts: