வெள்ளி, 31 மார்ச், 2017

பதில் கொடுக்கும் சிறுமி !!


BS3 வாகனங்களுக்கு தடை

BS 3  வாகனங்களுக்கு  தடை விதிக்கப்பட்டதை  தொடர்ந்து,  இன்று  ஒரே நாளில் எப்படியாவது  விற்று விடவேண்டுமே  என புலம்பலில்  உள்ள  டீலர்கள்  மற்றும்  நிறுவன ஷோ ரூம்  அலுவலர்கள் , வாகனங்கள்  விறபனையில்  மும்முரம்  காட்டி வருகின்றனர் .
அதன் படி,  எந்தெந்த  வாகனங்கள்  எந்த விலையில் கிடைக்கிறது  என்பதை  பார்க்கலாம். மேலும்  இன்று மாலை  நேரத்தில்  இருசக்கர  வாகனத்தை  வாங்க  சென்றால்  மேலும்  விலை  குறைப்பு  இருக்கக்கூடும்  என   எதிர்பார்க்கப்படுகிறது.
 மேலும்  நிறுவன  வாகனத்திற்கு , எவ்வளவு தள்ளுபடி  வழங்கி  உள்ளது , தற்போது  உள்ள  விலை என்ன ? அதிலிருத்து  எவ்வளவு  தள்ளுபடி  வழங்கி  இன்று  விற்கப் படுகிறது  என்பன உள்ளிட்ட  விவரம்  அடங்கிய  அட்டவணையை இப்போது  பார்க்கலாம்.

“தமிழர் பண்பாட்டு திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது” : பேராசிரியர் க.நெடுஞ்செழியன் March 30, 2017

“தமிழர் பண்பாட்டு திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது” : பேராசிரியர் க.நெடுஞ்செழியன்


தமிழர் பண்பாட்டு திட்டமிட்டு சிதைக்கப்படுவதாக எழுத்தாளரும், தமிழ் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.

கீழடி அகழாய்வு மற்றும் அதன் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நியூஸ்7தமிழுக்கு பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேட்டியளித்தார். அதன் சாரம் இங்கு வழங்கப்படுகிறது...

“கீழடி அகழ்வாய்வு தமிழினத்தின் தொல்லியல் வரலாற்றை உலகிற்கு புதிய ஒளியோடு வெளிபடுத்தும் ஆய்வாக அமைந்தது. ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடந்த அகழ்வாயில் கிடைத்த புதைபொருட்களில் குறிப்பிடத்தக்கது எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய பானைகள். 

இந்தியா முழுவதும் கிடைத்த எழுத்து பொறிப்பு அடங்கிய பானைகளை விட கொடுமணலில் கிடைத்ததை விட மிகமிக அதிகம். இந்தியாவில் கிடைத்த எழுத்து பொறிப்புள்ள பானைகளில் 99 விழுக்காடு தமிழகத்தில் கிடைத்தது. எழுத்துகளின் வரலாற்றில் கொடுமணல் அகழாய்வு மிகச்சிறந்த இடம் பிடிக்கக் கூடியது.

கொடுமணலில் அகழ்வாய்வு செய்ய வேண்டிய இடத்தில் இதுவரை 5 விழுக்காடு கூட அகழாய்வு நடைபெறவில்லை. கொடுமணல் ஆய்வும் தொடராமல் முடங்கிக் கிடக்கிறது. 

கிராமப்புறத்தை அடிப்படையாக கொண்டது தமிழர்களின் வாழ்வு என்று இவ்வளவு காலமாக சொல்லப்பட்டு வந்தது. அவைகளை தகர்க்கும் வகையில், தமிழர்களின் நகர வாழ்வை வெளிப்படுத்துவதாய் இந்த அகழ்வாய்வுகள் அமைந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கழிவுநீர் வெளியேறும் வழிகள் உருவாக்கப்பட்டிருந்தது எப்படி என்பதையெல்லாம் வெளிப்படுத்தியது கீழடி ஆய்வு.

ஏறத்தாழ 35,00-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கீழடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் நகர நாகரீகம் எவ்வளவு மேம்பட்டதாக இருந்தது என்பதை பறைச்சாற்றும் ஆய்வாக கீழடி அமைந்தது. 

இந்த ஆய்வினை தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருந்தார். ஆய்வு நடைபெற்றபோது அங்கு கிடைத்த பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்ற போது அந்த முயற்சிகளை தடுத்து, கீழடியிலேயே ஒரு அருங்காட்சியகம் உருவாக்க பல்வேறு அறிஞர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதில் எங்களது பங்களிப்பும் சிறிது உண்டு.

தமிழகத்தில் ஏன் இத்தகைய ஆய்வுகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்றால், தமிழினத்தின் பெருமையை வெளி உலகம் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு செயல்படுகிறது. 

இந்திய பண்பாட்டு வரலாற்றில் சமஸ்க்ருதத்திற்கு எதிராக இன்றளவும் போர் தொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மொழி என்றால் அது தமிழ் தான். சமஸ்க்ருத மொழிவழி பண்பாடு, தமிழ் மொழி வழி பண்பாடு இரண்டும் அடிப்படையில் முரண்பட்டவை. 

அந்த வகையில், சமஸ்க்ருத பண்பாட்டை உயர்த்துவதற்கும், அதன் வல்லாண்மையை நிலைப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியாக தமிழின பண்பாடுகள் புறக்கணிக்கப்படுகின்றன. பண்பாட்டு வரலாறுகள் சிதைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தொல்லியல் வரலாறுகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன அல்லது முடக்கப்படுகின்றன.

உண்மையிலேயே இதை ஒவ்வொரு தமிழனனும் உணர்ந்து கண்டிக்க வேண்டிய நிலையில் தான் இந்த அகழ்வாய்வின் முடக்கம் அமைந்துள்ளது.”

நேர்காணல் : கோ பிரின்ஸ்

மனித மூளையும் கணினியும் இணையும் தொழில்நுட்பம் March 29, 2017

இன்றைய உலகில் இயந்திரங்களின் ஆதிக்கத்தில் மனிதனின் திறன் கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகிக் கொண்டிருக்கும் சூழலில், மனித மூளையும் கணினியும் ஒருகிணைந்து இயங்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தை நியூரல் லிங் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

அமெரிக்காவிலுள்ள ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் இந்த நியூரல் லிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நியூரல் லேஸ் என்ற தொழிநுட்பத்தின் மூலம் மனித மூளையும் கணினியும் இணைக்கத்திட்டமிட்டுள்ளனர். 

இத்துடன் இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதனின் மூளையில் எண்ணங்களைப் பதிவேற்ற, பதிவிறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயரில் நியுரல் லிங் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை எதிர்கொள்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்றும் மனிதனின் அறிவுத்திறனுக்கும் டிஜிட்டல் திறனுக்கும் இடையே இணைக்கும் பாலமாகும் அமையும் இந்தத் தொழில்நுட்பம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நியூரல் லிங் நிறுவனத்தின் திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் 

சேலம் மாவட்ட வாலிபரின் 'வினோத' சாதனை March 31, 2017

சேலம் மாவட்ட வாலிபரின் 'வினோத' சாதனை


சேலம் மாவட்டத்தில் கராத்தே நடராஜ் என்பவர் மூக்கால் காரை தள்ளியும், ஒற்றை விரலால் காரை இழுத்தும் சாதனை செய்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. 

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாறு நடைபெறும் விழாவில் கராத்தே நடராஜ் என்பவர் கோவிலிலேயே ஆண்டுதோறும் பல்வேறு விதவிதமான சாதனைகளை செய்து காண்பித்து வருகிறார். 

இதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், அவர் மூக்கால் ஆம்னி காரை 10மீட்டர் தூரம் தள்ளியும், ஒரே விரலால் 10 மீட்டர் தூரம் காரை இழுத்தும் சாதனை படைத்து பார்வையாளர்களை அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கராத்தே நடராஜின் மாணவர்களும், சக பயிற்சியாளர்களும் பல்வேறு வகையான சாதனைகளை நிகழ்த்தி அசத்தினர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த சாதனையாளர் நடராஜ், உலக சாதனை புரிய வேண்டும் என்பதுதான் தன்னுடைய லட்சியம் என்றும், இதுபோல பல சாதனைகளை ஏற்கனவே  படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் ராகுல் காந்தி நேரில் சந்திப்பு March 31, 2017

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் ராகுல் காந்தி நேரில் சந்திப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 

பயிர் கடன் தள்ளுபடி, தமிழகத்திற்கு கூடுதல் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி  ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் 18வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விவசாயிகளைச் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தமிழக காங்கிரஸ்  
தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, கோடீஸ்வரர்களின் கடன்களை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாமல் பாரபட்சம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகள் போராட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழக மக்களை பிரதமர் மோடி அவமதிப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். 

விவசாயிகளை இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கப்போகிறோம் !! ரோசமுள்ள தமிழனே போராடு !! –



விவசாயிகளை இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கப்போகிறோம் !! ரோசமுள்ள தமிழனே போராடு !! – வீடியோ 
http://kaalaimalar.net/farmers-protest-2/

தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் சத்தமில்லாமல் நடக்கும் மொழிமாற்றம்

வேலூர் மாவட்டம் வழியாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையும், காட்பாடி வழியாக சித்தூர் செல்லும் நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.
Hindi nh
இந்த நெடுஞ்சாலைகளின் ஒரமாக உள்ள மைல்கற்களில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் ஊர் பெயர்களை அழித்துவிட்டு, முதலில் இந்தியிலும், இரண்டாவதாக தமிழிலும் ஊர் பெயர்களை எழுதி வருகின்றனர். இதில் அனைவரும் படிக்கும் வண்ணம் இருந்த ஆங்கிலத்தை முற்றாக அழித்திடும் பணியையும் அமைதியாக செய்து வருகின்றனர். இதனால் இந்தி மற்றும் தமிழ் தெரியாத வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாக புகார் எழுந்திருக்கிறது. ‌

இருசக்கர வாகனங்களுக்கு ரூ.12,500 வரை தள்ளுபடி

பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.12,500 வரையிலான தள்ளுபடியினை இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-4 கட்டுப்பாட்டு விதிகளை நிறைவு செய்யாத வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படும் என்று வாகன உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பிஎஸ்-3 விதிகளின்படி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மீது தள்ளுபடியினை வாகன உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இருசக்கர வாகன சந்தையில் முதலிடம் வகிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பிஎஸ்-3 விதியின்படி தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்களுக்கு ரூ.12,500-ம், பிரீமியம் பைக்குகளுக்கு ரூ.7,500 ச்மற்றும் மற்ற இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000-ம் தள்ளுபடியினை அறிவித்துள்ளது. அதேபோல இருசக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா நிறுவனம், பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட அனைத்து இருசக்கர வாகனங்களும் ரூ.10,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பானது மார்ச் 31 அல்லது ஸ்டாக் உள்ளவரை அளிக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மணலில் சிக்கிய லாரியை தனது வாகனத்தின் மூலம்மீ ட்க உதவிய பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான

#துபாயில் மணலில் சிக்கிய லாரியை தனது வாகனத்தின் மூலம்மீ ட்க உதவிய பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான...
இந்த இளவரசர் டிரைவர்க்கு கை கொடுக்குற மனசு இருக்கே ....
துபாய் காரங்க கிட்ட பிடிச்சதே ஏற்ற தாழ்வு பாக்கம கை குளுக்குறது

தமிழகத்தை கூட்டி குடுக்கும் பாஜகதான் தேச துரோகி..” வெளுத்து வாங்கிய சீமான்

“தமிழகத்தை கூட்டி குடுக்கும் பாஜகதான் தேச துரோகி..” வெளுத்து வாங்கிய சீமான்- வைரல் வீடியோ 

பாபர்மசூதியில் BJP மற்றும் VHP யின் சட்டவிரோத பயங்கரவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் அயோத்தி பூசாரி – அதிர்ச்சி தரும் ஆவணப்படம்!

பாபர்மசூதியில் BJP மற்றும் VHP யின் சட்டவிரோத பயங்கரவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் அயோத்தி பூசாரி – அதிர்ச்சி தரும் ஆவணப்படம்! கண்டிப்பா ஷேர் பண்ணுங்க !!

தங்கள் வாழ்வதாரத்தை இழக்க போகும் மக்கள் ! மக்களை ஏமாற்றும் மத்திய அரசு !

நாம் வாழ்வதற்கு அவசியமான ஒன்று உணவு. ஏழை, வறுமை கோட்டிற்கு அடியில் வாழும் மக்கள்   வயிற்றில் அடிக்கும் வகையில் ரேஷன் கடைகளை மூடும் பிளானை செய்ய தயாராகவுள்ளது மத்திய அரசு.அனைத்தும் கார்பொரேட் செய்யும் வேலை, இது இப்படி தொடர்ந்தால் மக்கள் தங்கள்  வாழ்வதாரத்தை இழக்கும் நிலை உருவாகும்.

வியாழன், 30 மார்ச், 2017

தேச பயங்கரவாத பா.ஜ.கவை வெளுத்து வாங்கிய சீமான்.

அ. தி.மு.க ரெண்டானா என்ன மண்னானா எங்களுக்கு என்ன?” பா.ஜ.க அ.தி.மு.கவை வெளுத்து வாங்கிய சீமான். முழு நிகழ்ச்சியிலும் Mixture சாப்பிட்டுக்கொண்டிருந்த தி.மு.க.”அ. தி.மு.க ரெண்டானா என்ன மண்னானா எங்களுக்கு என்ன?” பா.ஜ.க அ.தி.மு.கவை வெளுத்து வாங்கிய சீமான். முழு நிகழ்ச்சியிலும் Mixture சாப்பிட்டுக்கொண்டிருந்த தி.மு.க.
http://kaalaimalar.net/seeman-hates-of-speech/

கோடையில் இருந்து காத்துக்கொள்ள சில ஸ்மார்ட் டிப்ஸ்

வெளியில் செல்லவே முடியவில்லை. வாட்டி எடுக்கிறது வெயில். அதற்காக வெளியில் போகாமல் இருக்க முடியுமா என்ன? வாட்டி எடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்?
ஒருநாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகலாம். நொறுக்கு தீனிகளை தவிர்த்து இளநீர், மோர் போன்ற பானங்களையும், பழங்களை சாப்பிடலாம்.
உடல் சூட்டை தவிர்க்க வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம். கோடை வெயிலில் வியர்வை அதிகரிப்பதால் முடி உதிரும் பிரச்னை ஏற்படும். எனவே ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
முடியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வெந்தயம் அல்லது தயிரை பேஸ்ட் செய்து அதனை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் அலசலாம்
வெயிலின் தாக்கத்தால் உதடுகளில் வெடிப்பு ஏற்படும் இதனை தடுக்க தூங்க செல்வதற்கு முன்பு பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவிவிட்டு காலையில் அதனை சிறிதளவு காட்டனில் பன்னீரை நனைத்து துடைக்க வேண்டும்
குளிர்ச்சி தன்மை கொண்ட கற்றாலையை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் குளிர்ச்சி தன்மை ஏற்படுவதுடன் முகம் பளபளப்பாகும். படுப்பதற்கு முன்பு வாஸ்லின் அல்லது வெதுவெதுப்பான தேங்காய்ப்பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்வதன் மூலம் சருமம் வறண்டு போவது கட்டுப்படுத்தப்படும்.
வெயிலில் இருந்து சருமத்தையும், தேகத்தையும் பாதுகாக்க வெளியே செல்லும் போது தலைக்கு துணி அணிந்து அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி ஹேர் கட் செய்வதும் நல்ல பலன் தரும்.

யானைகளுக்கு மகிழ்ச்சி: குறைந்தது தந்தத்தின் விலை, வர்த்தகம்

சீனாவில் யானை தந்தத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் யானை தந்த வர்த்தகம் முழுவதுமாக ஒழிக்கப்படும் எனவும் தெரிகிறது.
சீனவில் யானை தந்தங்களின் தேவை மிக அதிகமாக இருந்ததால், ஆப்பிரிக்காவில் நிறைய யானைகள் கொல்லப்பட்டன. வருடத்திற்கு 20,000 யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படுகின்றன எனவும் இது ஆப்பிரிக்க யானைகள் அழிவுக்கு முக்கிய காரணம் எனவும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறினர். இந்நிலையில் சீன அரசாங்கம் தந்தத்தின் வர்த்தகத்தை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. யானை தந்தத்தை ஆபரணங்கள் மற்றும் பரிசு பொருட்களாக தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்த மாதத்திற்குள் மூடவும் யானை தந்தத்தினால் ஆன பொருட்களை விற்கும் கடைகளை இந்த வருட இறுதிகுள் மூடவும் சீன அரசாங்கம் முயன்று வருகிறது. மேலும், சீனாவின் பொருளாதார மந்த நிலையினாலும் தந்தத்தின் விற்பனை குறைந்தது.
2014-ம் ஆண்டில் ரூ 1.36 லட்சமாக இருந்த 1 கிலோ யானை தந்தத்தின் விலை ரூ 47,000-மாக குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. யானை தந்தத்தின் வர்த்தகம் சீனாவில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டால், ஆப்பிரிக்காவில் யானைகள் கொல்லப்படுவது நிறுத்தப்படும் எனவும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் யானை பாதுகாப்பு குழுகள் தெரிவித்துள்ளன.

மின் வர்த்தகம்: முதல் முறையாக இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம்

வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல்-பிப்ரவரி காலத்தில் இந்தியாவின் மின் இறக்குமதியை விட மின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததாக மத்திய மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய மின் ஆணையத்தின் தகவலின் படி, எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தில் முதல் முறையாக இந்தியா இறக்குமதியை விட அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. 2016-17-ம் ஆண்டு (ஏப்ரல்-பிப்ரவரி) 579.8 கோடி யூனிட் மின்சாரத்தை நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆதேபோல, பிற நாடுகளிலிருந்து 558.5 கோடி யூனிட் மின்சாரத்தை இறக்குமதி செய்துள்ளது. அதாவது, மின் ஏற்றுமதி மின் இறக்குமதியை விட 21.3 கோடி யூனிட் அதிகம். இந்தியா எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தை 80-களில் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் மின் இறக்குமதிதான் இதுவரை அதிகமாக இருந்துள்ளது. தற்போது ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில் மின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க இன்னும் சில நாடுகளுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

புதன், 29 மார்ச், 2017

Student Protest in Marina for Farmers


சிவ சேனாவை பொளந்து காட்டிய மோகன் பகவத்

குடிரயரசுத் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று  ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இப்பதவிக்கான தேர்தலில்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஸி ஆகியோரது பெயர்களை பா.ஜ.க. மேலிடம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மோகன் பகவத்துக்கே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பப்பட்டன.
 

இது குறித்து விளக்கம் மோகன் பகவத் விளக்கமளித்துள்ளார்,” தொலைக்காட்டிசிகளில் எப்படி வேண்டுமானாலும் செய்தி ஒளிபரப்பாகட்டும் அதைப் பற்றி தமக்கு கவலை இல்லை.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.



http://kaalaimalar.net/mohan-bagavath-refused-president-nomination/

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை “நீங்கள் எல்லாம் பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கிட்டு சாக வேண்டியது தானே” – காவல்துறை அதிகாரி !!

நீங்கள் எல்லாம் பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கிட்டு சாக வேண்டியது தானே” என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை திட்டிய மெரினா கடற்கரை காவல் நிலைய அதிகாரி மோகன் தாஸ்!

சுங்கசாவடியில் நிற்காமல் சென்ற பிஜேபி MP தடுத்த உழியரை கட்டையால் தாக்கிய பிஜேபி MP


























http://kaalaimalar.net/bjps-bharatpur-mp-bahadur-singh-koli-caught-on-cctv-beating-toll-plaza-guard/

எச்சரிக்கை! இந்த வகையான உணவுகள் உடலினுள் தீங்கு விளைவிக்கும் புழுக்களை அதிகரிக்குமாம்!

நம்மில் பலரும் அன்றாடம் ஒரே வகையான உணவுகளைத் தான் சாப்பிடுகிறோம். ஆனால் அப்படி சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பது தெரியுமா?
அதிலும் பலருக்கும் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை அன்றாடம் சிறிது சாப்பிட்டாலும், அது உடலினுள் குறிப்பிட்ட வகையான புழுக்களை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
இறைச்சிகளின் மூலம் உடலினுள் நுழையும் புழுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் அவை உடலினுள் நுழைந்த பின், மெதுவாக திசுக்கள், கண்கள் மற்றும் ஏன் மூளைகளில் கூட நுழைந்து தீங்கை உண்டாக்கும்.
அட்டென்புரூக்ஸ் மருத்துவமனை
கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள அட்டென்புரூக்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவினர், ஒரு நோயாளி கடுமையான தலைவலியுடன் தங்களது மருத்துவமனைக்கு ஒருமுறை வந்ததாக கூறினர்.
மறுமுறை
அதே நோயாளி சில நாட்கள் கழித்து மீண்டும் ஏதோ சில சோதனைக்காக வந்திருந்தார். அப்போது அவர் வேறு சில புதிய அறிகுறிகள் தென்படுவதாக புகார் அளித்தார்.
ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை
மேலும் இந்த நோயாளி சமீபத்தில் சீனா, தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று வந்ததாக கூறினார். இவர் சென்று வந்த நாடுகளில் தான் ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை என்னும் ஒட்டுண்ணி அதிகம் பரவியிருப்பதாக சில வழக்குகள் இருப்பது மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.
சோதனை
எனவே மருத்துவர்கள் இந்த நோயாளியின் உடலைப் பரிசோதித்து, அம்மாதிரியான ஒட்டுண்ணி உள்ளதா என்று சோதித்தனர். சில சோதனைகளின் முடிவில், இந்த நோயாளியின் உடலில் ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை என்னும் ஒட்டுண்ணி இருப்பது தெரிய வந்தது. உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் ஒட்டுண்ணியை வெளியேற்றி, அந்நோயாளியின் பிரச்சனையை சரிசெய்தனர்.
குறிப்பு
ஒருவரது உடலினுள் ஒட்டுண்ணி புழுக்களானது 2 வழிகளின் மூலம் நுழையும்.
அவையாவன:
  • ஒன்று மனிதனின் மலத்தின் மூலம் பரவும்.
  •  மற்றொன்று பாதிக்கப்பட்ட பன்றி அல்லது மாட்டு இறைச்சியை நன்கு வேக வைக்காமல் சாப்பிடுவது.
எனவே மக்களே எப்போது இறைச்சிகளை சாப்பிடுவதாக இருந்தாலும், அவற்றை சுத்தமாக கழுவி, நன்கு வேக வைத்து பின் சாப்பிடுங்கள். முக்கியமாக இறைச்சியை அதிகம் சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள். இதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை.

வரதட்சணை உணவு ஹலால் ஆகுமா?


மீண்டும் ஊளையிடுவது வேடிக்கையான நிகழ்வு!

தமிழச்சி தலைதெறிக்க ஓட்டம்!
ஃபிரான்ஸில் இருக்கும் #தமிழச்சி என்ற ஒரு பெண் தற்போது
நபிகளாரைப் பற்றியும், தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும், இஸ்லாம் குறித்தும் ஏதோ ஊளையிட்டு வருவதாக அறிகிறோம்.
கடந்த ஆண்டு #தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத அறைகூவலை ஏற்காமல் ஓட்டமெடுத்த இவர் தற்போது மீண்டும் ஊளையிடுவது வேடிக்கையான நிகழ்வு!

இந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே!

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவா நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு….


மாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும் என்பதை இதுவரை நாம் செவிவழிச் செய்தியாகவும், வல்லுனர்களின் கூற்றாகவும் கேள்விப்பட்டிருப்போம். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் முதல்கட்ட நகர்வாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2009ம் ஆண்டிலேயே மத்திய அரசிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டில் உள்ள முப்பது ஜீவநதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறியது. இமாலயத்த பிறப்பிடமாக கொண்டிருக்கும் கோசி, காக்ரா, கங்கா, யமுனா,மானஸ், சாரதா, தீஸ்தா உள்ளிட்ட 14 ஆறுகளையும், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட 16 ஆறுகளையும் இணைப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆய்வுகள் முழுவடிவம் பெறுவதற்குள் மூன்று அரசுகள் மாறிவிட்டன. திட்டமதிப்பிலும் அபார உயர்வு ஏற்பட்டது.
மகாநதி-கோதாவரி நதிகளையும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளையும் இணைக்க முடியும். கோதாவரி-கிருஷ்ணா நதிகளை மூன்று இடங்களில் இணைக்க முடியுமென்றும் ஆய்வறிக்கை கூறியிருக்கிறது. ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியையும், சோமசீலம், கிராண்டு, அனிகட் பகுதியில் பெண்ணாறு-காவிரி நதிகளையும் இணைக்க முடியும். கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்க முடியும். மேலும் பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆறுகளின் இணைப்புக்கும் சாத்தியம் இருப்பதாக தெளிவுபடுத்தியது அந்த ஆய்வறிக்கை.
மேற்சொல்லப்பட்ட அனைத்து நீர் வழிகளும் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்றால், எவ்வளவு ஆராய்ச்சிகளுக்கு பிறகு இதன் வடிவமைப்பு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.
bn-jo738_indkal_g_20150727143130
ஆனால் நாட்டின் இரத்தநாளங்களாக விளங்கும் நதிகளை இணைப்பதில் மறைந்த நம் அப்துல்கலாம் ஐயாவும் கூட ஆர்வமாகவே இருந்தார். தன்னுடைய விஞ்ஞான அறிவினைக் கொண்டு அவர் சில ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தார். மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோதுவதில் ஆச்சரியம் இல்லை. நதியிணைப்பு என்பது சாத்தியமற்ற ஒன்று, அது மிகப்பெரிய சவால் என சொல்லுவதில் அர்த்தமில்லை என்றார் கலாம். இந்தியாவின் 54 கோடி இளைஞர்கள் ஒன்றுபட்டு நின்றால், இத்திட்டத்தை செயல்படுத்தி வெற்றியடைய முடியும். இளைஞர் சமுதாயத்தால் மட்டுமே எந்த பிரச்சினைகளையும் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி அடைய முடியும் என நம் இளைஞர்கள் மீது தன் நம்பிக்கை விதையை ஊன்றிச் சென்றார்.
_72b0ee8a-cfcf-11e5-94bd-a06a76346e8f
நதிநீர் இணைப்புத் திட்டத்தால் கிடைக்கும் பலன்கள்: 
1) வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடியது.
2) 3.5 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்களுக்கு கூடுதலான தண்ணீரை பயன்படுத்த முடியும்.
3) 14 கோடி ஹெக்டேராக இருக்கும் சாகுபடி நிலப்பரப்பை 17.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும்.
4) நாட்டில் உள்ள எந்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்படாது.
நீர்ப்பெருக்கு இல்லாத அல்லது வற்றிய ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும்.
5) ஆற்றங்கரையில் வசிக்கும் மீனவர்களின் பொருளாதாரம் மேம்படும்.
http://www.channel42.in/tamil/river-linking-narendra-modi-green-tribunal

கார்பரேட்களுக்கு விளக்கு பிடிக்கும் மோடி !! தமிழர்களை கொல்லும் திட்டம் !! – காந்தியின் செருப்படி பேச்சு

கார்பரேட்களுக்கு விளக்கு பிடிக்கும் மோடி !! தமிழர்களை கொல்லும் திட்டம் !! – காந்தியின் செருப்படி பேச்சு !!- வீடியோ 

செவ்வாய், 28 மார்ச், 2017

முஸ்லிம்கள் தேச விரோதிகள் !! முஸ்லீம்களுக்கான சலுகைகளை நிறுத்துங்கள் : பிரவீன் தொகாடியா திமிர் பேச்சு !!


முஸ்லீம்களுக்கு தரப்படும் சலுகைகளை இந்துக்களுக்கும் வழங்க வேண்டும். இல்லையேல் முஸ்லீம்களுக்கான சலுகைகளை நிறுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழை இந்துக்களுக்கு உணவு தானியங்களை நன்கொடையாக வழங்கும் ஏக் முத்தி அன்ஜ் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்துக்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து முஸ்லீம்கள் சலுகைகளைப் பெறும்போது படேல், தாக்கூர், கோலி இன மக்கள் ஏன் சலுகைகளைப் பெறக்கூடாது என பேசினார்.
இதேபோல், முஸ்லீம்களுக்கு புனிதப்பயணம் செய்யவும் கல்வி நிறுவனங்கள் நடத்தவும் மானியங்கள் அளிக்கும் அரசு, இந்துக்களுக்கு அதுபோன்ற மானியங்களை வழங்குவதில்லை என குற்றம்சாட்டினார்.
எனவே முஸ்லீம்களுக்கு தரப்படும் சலுகைகளை நிறுத்தவேண்டும், அல்லது அதே சலுகைகளை இந்துக்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் பேசினார்.
http://kaalaimalar.net/bjp-praveen-togadia-hindu-muslim-bjp-congress/

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கிராமபுறத்தில் நடந்த கொடூரம்!! தன் குடும்பத்தார் முன்னிலையில் 20 வயது பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த #RSS #BJP ன் உயர் சாதி கட்டபஞ்சாயத்து !!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கிராமபுறத்தில் நடந்த கொடூரம் 
தன் குடும்பத்தார் முன்னிலையில் 20 வயது பெண்ணை பெற்ரோல் ஊற்றி எரித்த #RSS #BJP ன் உயர் சாதி கட்டபஞ்சாயத்து  !!!!
பிஜேபி ஆட்சியின் புதிய இழிசாதி இந்தியா !!!!
http://kaalaimalar.net/20-year-old-woman-protested-cutting-of-trees-burnt-alive-in-jodhpur-village/

விவசாயிகளின் இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம்! 4 நாட்கள் கடந்தும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கை!! இது யாருக்கான அரசு ?

இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம்!
எலியை உயிருடன் வாயில் வைத்து நூதன போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழக விவசாயிகள், 14 நாட்கள் கடந்தும் மத்திய மாநில அரசு கண்டுகொள்ளாததால் இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம், சாலையில் உருண்டு புரளும் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர்
source: kaalaimalar

மத்திய அரசின் மீத்தேன் திருவிளையாடல்..! தமிழர்களின் முதுகில் குத்தும் பாஜக

மத்திய அரசின் மீத்தேன் திருவிளையாடல்..!


http://kaalaimalar.net/hydro-carbon-bjp-political-issue/

பொய் தகவல் பரப்பும் டைம்ஸ் நவ் செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமியை உள்ளே நுழைய விடாமல் விரட்டியடித்த நிறுவனம்! – வீடியோ ரிப்போர்ட் !


டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முக்கிய விவாத நிகழ்ச்சி நியூஸ் ஹவர். இதனை தொகுத்து வழங்கி வந்தவர் அர்ணாப் கோஸ்வாமி.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனாலும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனால் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி தனி தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் டைம்ஸ் நவ்வில் தனக்கு நிகழ்ந்த அவமானங்கள் விளக்கியதாக நியூஸ் மினிட் தளம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 15 ஆம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பு, அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பாக ஸ்டியோவிற்குள் தன்னை நுழைய விடாமல் தடுத்து விரட்டியடித்ததாக கூறியுள்ளார். இதனால் கடும் மன வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
source: kaalaimalar.net 

சாதி கலவரத்தை ஏற்படுத்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக தலைவராக ஆக்க திட்டம் !!

தமிழக பாஜக தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வானதி சீனிவாசன் வரக் கூடாது என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு வானதியின் பேச்சு அமைந்து விட்டது. இவர் மட்டும் தமிழக பாஜக தலைவரானால் ஜாதி ரீதியாக பல பிரச்சினைகளுக்கு இவர் காரணமாக அமைவார் என்ற அச்சமும் எழுந்துள்ளது மக்கள் மத்தியில்
source: Kaalaimalar.net

பிரசவ வேளையில் இறந்து போன இளம் பெண்ணின் சடலத்தை கற்பழித்த சங்பரிவார மிருகங்கள் !! ” இறந்த இசுலாமியப் பெண்களின் உடல்களை தோண்டி எடுத்து கற்பழியுங்கள் என்ற உபி முதல்வன்

பிரசவ வேளையில் இறந்து போன இளம் பெண்ணின் சடலத்தை கற்பழித்த சங்பரிவார மிருகங்கள்.
ஆதித்யானந்த யோகி இவன் உபியின் முதல்வராக உள்ளான். இவன் தான் சென்ற,” இறந்த இசுலாமியப் பெண்களின் உடல்களை தோண்டி எடுத்து கற்பழியுங்கள் என்றான். அதை இன்றைக்கு மீரட் அருகில் உள்ள காசியாபாத் எனும் மாவட்டத்தில் சங்கப் பரிவார மிருகங்கள் இந்த வேலையைச் செய்துள்ளன.
source`;
http://kaalaimalar.net/rape-dead-muslim-womens/

Image may contain: 1 person, text
Related image

திங்கள், 27 மார்ச், 2017

உலகின் சக்தி வாய்ந்த முதல் பெண்மணி அமினா முஹம்மத்

ஐக்கிய நாடுகள் அவையின் புதிய துணை பொதுச்செயலாளர் அமினா முஹம்மத் நைஜீரியாவைச் சேர்ந்தவர்.
நைஜீரியாவின் சுற்றுச் சூழல் அமைச்சராக பதவி வகித்தவர் . பதவியேற்ற பின்பு செய்தியாளர் சந்திப்பில் தாம் பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் சவாலான பணி என்பது எனக்குத் தெரியும். ஆனால் அடுத்துவரும் ஆண்டுகளில் அதனை விரைந்து செய்து முடித்து சச்சரவுகளை முன் கூட்டியே தடுக்கும் அஜெண்டாவை செயற்படுத்த முடிவு செய்துள்ளேன் என்கிறார்.

பாதுகாப்பு சபையில் மேலும் பிரதிநிதிகளை அதிகப்படுத்துவது தனது பணிகளில் மிக முக்கியமானது என தெரிவித்து. இருக்கிறார். ஐநா பொது செயலாளரின் முழு ஒத்துழைப்புடன் அதனை செய்து முடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அமினா.

இந்தியா ஐ நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

அது தொடர்பான வலுவான லாபியை அமைத்து இருந்தும் கூட சீனா , பாகிஸ்தான் போன்ற சில நாடுகளைத் தவிர முக்கிய நாடுகள் ஆதரவு அளித்து இருந்த போதிலும் முயற்சி கைகூடாமல் இருந்தது. ஆனால் அமினா முஹம்மத் முன் முயற்சியால் அது விரைவில் நிறைவேறும் என நம்பலாம்.

உலகின் மிக முக்கியத்துவம் மிகுந்த பொறுப்பான ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளராக ஓர் பெண்மணியைக் கொண்டு வர பல்வேறு தொண்டு அமைப்புகள் செய்த முயற்சி தோல்வியில் முடிய துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் அமினா முஹம்மதை பொது செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் நியமித்தார் இது ஐநாவின் இரண்டாவது உயர் பதவியாகும் .

ஐநாவுக்கான அமெரிக்க நிதியுதவியை குறைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தல் குறித்து அமினா கூறும்போது, இது மிகவும் கவலைக்குரிய ஒன்றுதான். இது போன்ற பின்னடைவுகளை மற்றும் சில கருத்து திரித்தல்களை பேசித்தீர்த்து களைய முயல்வோம் என்று தெரிவித்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் துறையில் ருமானா அஹ்மத் பணியாற்றி வந்தார். அவர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவராக வலம் வந்தார். ஆட்சி மாறியதன் பின்னர் ருமானா விலகினார். ருமானா முக்கியத்துவம் மிகுந்த வெள்ளை மாளிகை பொறுப்பில் இருந்து வெளியேறினார். இன்று ஐநா அவையில் துணை பொதுச்செயலாளராக அமினா என்ற முஸ்லிம் பெண்மணி பொறுப்பேற்றுள்ளார்.

லெக்கின்ஸ் அணிந்து வந்ததால் விமானத்தில் செல்ல தடை

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தில் பெண்கள் லெக்கின்ஸ் உடை அணிந்து வந்ததால் அவர்களுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் தடைவிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மின்னெ போலீஸ் நகருக்கு செல்லவிருந்த பயணிகள் விமானத்தில் 2 பெண்கள் லெக்கின்ஸ் உடை அணிந்து பயணம் செய்ய வந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி உடையை மாற்றினால் தான் நீங்கள் விமானத்தில் பயணிக்க முடியும் என அதிகாரிகள் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரு பெண் லெக்கின்ஸ் மீது வேறு உடை அணிந்து பயணத்தை தொடர்ந்தார். மற்றொருவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
அனைத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பு கருதியே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும் எங்களது விமானங்களில் பயணம் செய்பவர்கள் செருப்பு இல்லாமலோ, முறையாக ஆடை அணியாமலோ இருந்தால் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி, விமான நிறுவன ஊழியர்களும் இதுபோன்ற ஆடைகள் அணியக் கூடாது என்பது யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விதியாகும்.

திருச்சி மணப்பாறை அருகே 2 வயது ஆண் குழந்தை கடத்தல்

திருச்சி மணப்பாறை அருகே 2 வயது ஆண் குழந்தை கடத்தல்-  வீடியோ 
திருச்சி அருகே உள்ள  மணப்பாறையில் 2 வயதுக் குழந்தையைக் கடத்திச் சென்ற மர்ம  நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி அரபிக்குளம் சந்து தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவரின் 2 வயது குழந்தை சாய் தர்ஷன். கடந்த ஒரு வார காலமாக, குழந்தை சாய் தர்ஷன் மணப்பாறை அத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனது தாத்தாவின் வீட்டில் தங்கியுள்ளான்.
நேற்று காலையில், குழந்தை சாய் தர்ஷன் தன் சகோதரி மற்றும் அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், தர்ஷனை இருசக்கர வாகனத்தில் வந்து கடத்திச் சென்றான்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற சிறுவர்கள், வீட்டு பெரியவர்களிடம் இதனை தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நடுப்பட்டி டோல் பிளாசாவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவல் நிலையங்களில், குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் கடத்தப்பட்ட குழந்தையை பார்த்தால் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நெடுவாசலை கார்நாடக எம்.பி.க்கு தாரை வார்த்த மத்திய அரசு.

இயற்கை எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறைக்கும், எரிவாயு எடுக்கும் நிறுவனங்களுக்கும் இன்று கையெழுத்தானது.
இதன்படி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியும் அடங்கும்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பாஜக எம்.பி.க்கு சொந்தமான நிறுவனம் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றது.
ஏற்கெனவே தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் காவிரி நீர் பிரச்சனை இருக்கும் பொழுது தற்போது மத்திய அரசு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி., நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*


📫 _ஆன் லைனில் அனைத்தும்_
*புதிதாக வாக்களர் அட்டை பெற*
*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*
*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.