புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 14ஆவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் என்றும் பொதுமக்களின் நலனுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் எனவும் கூறி நெடுவாசல் பகுதியில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறியல், முற்றுகை, வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போராட்டத்தை முன்னெடுக்க அப்பகுதியில் உள்ள 80 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.
நேற்று 13ஆவது நாளாக போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று 14ஆவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.