பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை இன்று முதல் தமிழகத்தில் வணிகர்கள் விற்க மாட்டார்கள் என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
1/3/2017. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு கண்டனம் தெரிவத்தார். இயற்கை வளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்படுவதாகவும், அதை எதிர்த்து தான் நெடுவாசலில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகமெங்குமுள்ள தமிழர்கள் கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்களின் சதி உள்ளதென்றும், அதனாலேயே தமிழரின் பாரம்பரிய கலாச்சாரம் முதல் உணவு வரை பலவும் அழிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் நீர் வளத்தை உறிஞ்சி நடத்தப்படும் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் குரல் எழுப்பட்டது. இக்கோரிக்கையை ஆதரித்த வணிகர் சங்கங்கள் மார்ச் 1ம் தேதி முதல் அந்நியநாட்டு குளிர்பானங்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படாது என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.