புதன், 1 மார்ச், 2017

நெடுவாசல் கேன்சருக்கு 20 போ் பலி.! அதிர்ச்சி தரும் பின்னணி !

நெடுவாசலில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் தேவையற்றது. இதனால் நாட்டின் வளா்ச்சி பாதிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவா்கள் சொல்லி வருகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி தலைவா்களே நெடுவாசல் அருகே உள்ள வாணக்கன் காடு பகுதிக்கு வாங்க இங்கதான் 1993ம் ஆண்டு மாரிமுத்து என்பவரின் நிலத்தில் 13,500 அடி ஆழத்தில் போர் அமைக்கப்பட்டது.
3 ஆண்டுகள் கழித்து நிலத்தை மீண்டும் மாரிமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டனா். அந்த பிளாண்டில் இருந்து வெளியேறிய வாயு கழிவால் தினமும், மக்கள் வாந்தி, மயக்கம் அடைந்து வருகின்றனா்.
இந்த பகுதியில் 16 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டது. நிலத்தை கொடுத்த மாரிமுத்து, ராமன், வெலன் மற்றொரு ராமன், கல்யாணி மூர்த்தி, காமாட்சி உள்ளிட்ட 8 பேர் இறந்துள்ளனா்.
மேலும் மாரிமுத்துவின் மனைவி அன்னக்கிளி உள்ளிட்ட 8 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
இதன் கழிவால் ஆரோகிய மேரி, லீயோ, நேசா, செபஸ்தியான் உள்ளிட்ட 12 பேரும் இறந்துள்ளனா். வேதிப்பொருட்கள் நிலத்தடி நீருடன் கலந்தால்தான் கேன்சர் நோய் வருகிறது என்கிறனா் இந்த பகுதிமக்கள்.
என்ன பாதிப்பு என்று கூறும் பாரதிய ஜனதா கட்சியை சோ்ந்தவா்கள் இந்த பகுதியில் வந்து பாருங்க. இதனை தட்டிக் கேட்ட தேச துரோகிய, நாங்க பாவம் இல்லையா, ஏன்டா எங்க வாழ்க்கையில் விளையாடுறீங்க என்ற புலம்பி வருகின்றனா்.
அது போல இந்த பகுதி மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் மூளை வளா்ச்சி குன்றியவா்களாக உள்னா்.

kaalaimalar