வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.39,565 கோடியை தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டிருந்த நிலையில், மத்தியக் குழு வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூபாய் 2,096.80 கோடியை வழங்கலாம் என உள்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்யத்தாலும், காவிரியில் இருந்து போதிய அளவு நீர் திறக்கப்படாத காரணத்தினாலும் இந்தாண்டு அதிகப்பட்ச வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலையும் செய்து கொண்டனர்.
இதனையடுத்து தமிழக வறட்சி பாதிப்பை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு ஜனவரியில் தமிழகம் வந்தது. ஜனவரி 22-ஆம் தேதி முதல், 25-ஆம் தேதி வரை தமிழக வறட்சி பாதிப்பு குறித்து அக்குழு ஆய்வு நடத்தியது. அப்போது, வறட்சி நிவாரணமாக ரூபாய் 39,565 கோடியை வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096.80 கோடி வழங்க மத்தியக்குழு உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூபாய் 1,748.28 கோடி வழங்கலாம் என துணைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த இரண்டு குழுக்களின் பரிந்துரைகள் தொடர்பாக மத்திய அரசு நாளை முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பதிவு செய்த நாள் : March 22, 2017 - 01:39 PM