தமிழகத்தில் தற்போது நெடுவாசல் கிராமத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மீத்தேன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நெடுவாசல் மட்டுமல்ல அதனை சுற்றியுள்ள பல கிராமங்கள் பாலைவனமாகும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
மேலும், நிலத்திற்கு அடியில் பல ஆயிரம் அடிகள் போர்வெல் மூலம் துளையிட்டு மீத்தேன் எரிவாயுவை எடுக்கும் போது அதிலிருந்து வெளியாகும் ரசாயன கழிவுகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் துர்க்மேனிஸ்தான் என்ற நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக பெரிய அளவிலான கிணறு போன்று தோண்டப்பட்டிருக்கிறது.
இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கடும் பாதிப்புகளை சந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து துர்க்மேனிஸ்தான் நாட்டு அரசு, அந்த மீத்தேன் கிணறை மூட முடிவெடுத்துள்ளது.
ஆனால் 40 ஆண்டுளாகியும் இன்னும் அந்த மீத்தேன் கிணற்றை மூட முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
kaalaimalar