வெள்ளி, 24 மார்ச், 2017

​ஏ.கே-47 துப்பாக்கியால் 67 முறை சுடப்பட்டு உயிரிழந்த காங்கிரஸ் பிரமுகர்! March 23, 2017

​ஏ.கே-47 துப்பாக்கியால் 67 முறை சுடப்பட்டு உயிரிழந்த காங்கிரஸ் பிரமுகர்!


உத்ரகாண்டில் முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் பிரமுகர் நீராஜ் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், மொத்தம் 67 குண்டுகளால் அவர் சுடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் நகரின் முன்னாள் துணை மேயர் நீராஜ் சிங். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபரான இவர், கடந்த 21-ம் தேதியன்று தன் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்து காரை வழிமறித்த 4 பேர் கொண்ட மர்ம கும்பங்கள் கைத்துப்பாகி மற்றும் ஏ.கே-47 ரக துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுடத்தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காரில் இருந்த நீராஜ் சிங்கும், அவருடன் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீசார், தொழில் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பல் மொத்தம் 67 குண்டுகளால் காரில் இருந்த நபர்களை சுட்டுத்தள்ளியுனர் எனவும் தெரிவித்தனர். இதுகுறித்து, நீராஜ் சிங்கின் தாயார் கூறுகையில்,” என் மகனை கொன்றவர்களை, நிச்சயமாக பழிதீர்ப்போம்” என தெரிவித்தார். உயிரிழந்த நீராஜ் சிங் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: