பெரம்பலூரில் மாந்திரீகம் கற்றுக் கொடுக்கும் மந்திரவாதி கார்த்திகேயன். இவர் வீட்டில் அழுகிய பிணத்தை வைத்து பூஜை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
சம்பவத்தன்று போலீசார் நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் அதிரடியாக போலீசார் புகுந்தனா். அப்போது ஒரு மரப்பெட்டியில் அழுகிய நிலையில் உள்ள ஒரு பெண்ணின் உடலை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தனா். போலீசார் அவா்களை கைது செய்து விசாரித்தனா்.
அவா்களின் வீட்டில் இருந்து சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்த மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகள், கடல் குதிரைகள் என பல மாந்திரீக புத்தகங்கள் என பலவற்றை கைப்பற்றினா்.
போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார் மந்திரவாதி கார்த்திகேயென். ஆவிகளுடன் பேச திருமணம் ஆகாத, பல வித கனவுகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட இளம் பெண்ணின் உடலை வைத்து நள்ளிரவு பூஜை செய்ய வேண்டும்.
தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டை வைத்து பூஜை செய்து அதில் இருந்து வரும் கருப்பு மை மூலம், விரும்பும், ஆண்கள், பெண்களையும் வசியம் செய்யலாம் நாங்கள் இதற்கான பூஜையில் ஈடுபட்டோம்.
இளம் பெண்ணின் உடலை சென்னை மயிலாப்பூரில் உள்ள சுடுகாட்டில் ரூ.5000த்திற்கு வாங்கி வந்தோம் என்றனா்.
இதனையடுத்து சென்னை மயிலாப்பூருக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனா்.
இதனைத் தொடா்ந்து சுடுகாட்டு ஊழியா்கள் தன்ராஜ், கார்த்திக் ஆகி 2 பேரையும், மந்திர வாதியின் கார் ஓட்டுனா் சதீஸ், மதுரையை சேர்ந்த சைக்காலஜி பட்டதாரி மாணவர் வினோத் குமார் ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடா் விசாரணையில் ஈடுப்பட்டனா்.
அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
மந்திரவாதி பிணத்தை வைத்து நான் ரகசிய பூஜை செய்யவேண்டும். அப்படிசெய்தால் பெண்களை வசியம் செய்யும் சக்தி எனக்கு கிடைக்கும். அதன் மூலம் நீங்கள் விரும்பும் பெண்களை உங்கள் சொல்படி கேட்க வைக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளான்.
பெண்கள் எங்கள் சொல்படிக் கேட்பார்களாக என்று ஆச்சிரியத்துடன் கேட்ட அவா்கள் 4 பேரும்சோ்ந்து. அந்த இளைம் பெண்ணின் பிணத்தை காரில் சுடுகாட்டில் இருந்து இரவோடு இரவாக போலீசாரின் கண்ணில் மண்ணைத்தூவி எடுத்து வந்துள்ளனா்.
இதுபோல பாண்டிச்சேரி, கர்நாடக, கேரளாவில் இருந்துகூட இந்த மந்திரவாதிக்கு வாடிக்கையாளா்கள் உண்டாம். இவா் கொடுக்கும் மையை வைத்துக் கொண்டால் பெண்களை எளிதாக வசியம் செய்யலாமாம்.
பெண்களை வசியம் செய்ய பிணத்தைக் கொடுத்தவா்கள் திருச்சி மத்திய சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கின்றனா். என்ன கொடுமை சார் இது.