செவ்வாய், 14 மார்ச், 2017

திமுக மன்னிப்பு கோரினால் கச்சத்தீவை மீட்க போராடத் தயார்! March 13, 2017


கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் கொடுத்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர்கதையாகி உள்ளன. இந்நிலையில், இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால், கட்சத்தீவை மீட்க வேண்டுமென தமிழக மீனவர்களிடையே மீண்டும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கச்சத்தீவு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மன்னிப்பு கோரினால் கச்சத்தீவை மீட்க தாம் போராடுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம்செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/3/2017/if-dmk-asks-forgiveness-i-will-try-get-back-kachatheevu-says