ஞாயிறு, 12 மார்ச், 2017

மெட்ரோ ரயிலில் திருக்குறள் மறைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்

சென்னை மெட்ரோ ரயில்களில் திருக்குறள் மறைக்கப்பட்டு, பன்னாட்டு குளிர்பான விளம்பரங்கள் எழுந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலுமாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 21 மாதங்களாக இயக்கப்படும் ரயில் பெட்டிகளின் உள்ளே திருக்குறள் எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை மறைக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இது, ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாளைக்கு சுமார் ஏழாயிரம் முதல் பதினைந்தாயிரம் பயணிகள் வரை பயணிக்கும் நிலையில், மெட்ரோ ரயிலில் திருக்குறள் இருப்பதாலேயே, தங்களது பிள்ளைகளை அழைத்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரயிலில் திருக்குறள் மறைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்