செவ்வாய், 7 மார்ச், 2017

எதற்கெடுத்தாலும் போராட்டமா? உங்களுக்கு வேலையே இல்லையா? இலவு.கணேசன் !

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையில்லாதது என்று பா.ஜ.க.வின் ராஜ்ய சபா எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இல.கணேசன் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. குஜராத், அஸ்ஸாம், ஆந்திரா, புதுச்சேரி, அருணாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் எரிவாயு எடுக்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் விவசாயிகளை தூண்டிவிட்டு சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். அதேபோல் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்.
மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 95% விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். இதனால் வறட்சியால் பாதித்த விவசாயிகள் பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இந்நிலையில் மக்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நேரத்தில் வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்கு அனுமதி அளித்தது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்

http://kaalaimalar.net/ela-ganesan-neduvasal-protest/

Related Posts: