வெள்ளி, 20 நவம்பர், 2020

நூற்றுக்கும் அதிகமான குற்றவியல் வழக்குகள்:

 மும்பை நிழல் உலக தாதாக்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்டவர் ரவி பூஜாரி. இவரை  கடந்த ஆண்டு (2019) செனகல் அரசு இந்தியாவுக்கு நாடுகடத்த அனுமதி அளித்தது.

ரவி பூஜாரி மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவை   நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறித்தல் தொடர்புடைய வழக்குகளாகும்.

கர்நாடகா, மும்பை, குஜராத், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பூஜாரி மீது பதிவு செய்யப்பட்ட 107 வழக்குகளை கர்நாடகா குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. 19 முக்கிய வழக்குகளில் விசாரிக்க பூஜாரியை மும்பைக்கு அழைத்துவர கர்நாடக நீதிமன்றத்திடம் பல முறை மும்பை காவல்துறை முறையிட்டது.

மும்பை குற்றப்பிரிவு காவல்துறை தனது காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த போது,  தான் மற்ற மாநில காவல்துறைக்கு மாற்றப்படுவதால் வழக்கின் விசாரணை மேலும் தாமதமாகும் என்று பூஜாரியின் வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, 2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் தலைவர் பிரமோத் ரடன் படிலை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய  வழக்கை விசாரித்து வரும் மும்பை சிறப்பு நீதிமன்றம் பெங்களூர்  அமர்வு நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அக்கடிதத்தின் அடிப்படையில், பூஜாரியை காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூர் அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் மும்பை காவல்துறைக்கு  அனுமதி வழங்கியது.

ரவி பூஜாரி ஏன் மும்பைக்கு செல்ல மறுக்கிறார் ?

மும்பை குற்றப்பிரிவு காவல்துறை தாக்கல் செய்த  மனு மீதான விசாரணையின் போது, மும்பையில் அதிகப்படியான கொரோனா நோய்த் தொற்று பரவல்  இருப்பதால் மனுதாரரின் உயிருக்கு இருப்பதாக  வழக்கறிஞர் தில்ராஜ் செக்வீரா கூறினார்.

எவ்வாறாயினும்,  மும்பை சிறையில் தான் கொல்லப்படலாம் என்று பயம் பூஜாரியிடம் இருப்பதாக  வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த காலங்களில், மும்பையில் பல்வேறு தாதா கும்பல்களுக்கு இடையே  கடுமையான போட்டியும், பகைமையும் இருந்தது வந்தது. இதன் காரணமாக,  கைது செய்யப்பட்டவர்கள் மோதிக் கொள்ளாதவாறு பெரும்பாலும் சிறைச்சாலைகளில்  பாதுக்காப்பான இடங்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.

சோட்டா ராஜனின் உதவியாளரான ஓ. பி சிங், நாசிக் சிறையில் மற்ற கும்பல் உறுப்பினர்களால் 2002 இல் கொல்லப்பட்டார்.

2013 ஆம் ஆண்டில், தலோஜா மத்தியசிறையில், தாதா  அபு சலீம் தேவேந்திர ஜக்தாப் என்பவர் தாக்கினார். சிறை வளாகத்திற்குள் ஜக்தாப்  துப்பாக்கியை கட்சிதமாக  கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இருப்பினும், இந்த தாக்குதலில் அபு சலீம் நூலையில் உயிர் தப்பினார்.

1993-ம் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தலோஜா மத்தியசிறையில் அபு சலீம் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி பூஜாரி எந்த கும்பலுடன் தொடர்பில் இருக்கிறார்?

உடிப்பி நகரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆரம்ப காலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவ்லியில் குடியேறினார். ஒரு கும்பலைப் பற்றி காவல்துறைக்கு துப்புக் கொடுத்த பாலா ஜால்ட்டே என்பவரை கொலை செய்த பின்னர், சோட்டா ராஜனின் கவனத்தை பெற்றார். அந்த நேரத்தில், சோட்டா ராஜன், தாவூத்தின் இப்ராஹீம்  இருவரும் நட்பு பாராட்டி வந்தனர். ரவி பூஜாரி இவர்களின் கீழ் வேலை செய்து வந்தார்.

1992 -93 மும்பையில் நடந்த மும்பை மதக் கலவரத்திற்குப் பிறகு, சோட்டா ராஜனும், தாவூத் இப்ராஹிமும் பிரதான எதிரிகளாக உருமாறினார். கும்பல் பிளவுபட்டது.  பூஜாரி சோட்டா ராஜனின் பக்கபலமாக செயல்பட்டார். இருப்பினும், 2000 ஆம் ஆண்டில், பாங்காக்கில் தாக்கப்பட்டபோது, தனது இருப்பிடத்தை  ராஜன் உட்பட பலரும் தனது இருப்பிடத்தை கசிய விட்டதாக பூஜாரி  சந்தேகித்தார். அதன் பின், தனக்கென்று தனியான ஒரு கும்பலை உருவாக்கத் தொடங்கினார். சோட்டா ராஜனைப் போலவே, தன்னை ஒரு ‘இந்து டான்’ என்று இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

இதற்கிடையே, சோட்டா ராஜன், இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் 2015ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு,  இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அன்றிலிருந்து, ரவி பூஜாரி தனது சட்டவிரோத செயல்பாடுகளை  சுதந்திரமாக செய்து வருகிறார்.

மும்பைக்கு எப்போது அழைத்து வரப்படுகிறார்?

பூஜாரியின் வழக்கறிஞர் அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வழக்கு நாடுகடத்தலுக்கு  அனுமதி வழங்கும்  செனகல் அரசு உத்தரவில்,  விசாரிக்கப்படக்கூடிய வழக்குகளின் பட்டியலில் பிரமோத் ரடன் படில் வழக்கு குறிப்பிடப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார் .

உயர் நீதிமன்றம் தலையிடாவிட்டால், அவர் அடுத்த வாரத்திற்குள் மும்பை சிறையில் அடைக்கப்படலாம்    என்று ஒரு அதிகாரி கூறினார்.