தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்ஸி, கோக் உள்ளிட்ட நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது என தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்கை கடந்த 2 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலையரசன் மற்றும் ஏ.எஸ்.சிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோக் மற்றும் பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க விதித்திருந்த இடைக்காலத் தடையை நீக்கியதோடு, தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு பொது நல மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு உள்ளிட்டோர் தாக்கல் செய்த அந்த மனுவில் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் (SIPCOT) இயங்கிவரும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களான பெப்சி மற்றும் கோக் ஆகிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான தண்ணீரை தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுப்பதால், கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகவும், நீராதாரங்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்படவேண்டிய இயற்கை வளங்கள் பெருநிறுவனங்களின் மூலமாக மதிப்புக்கூட்டப்பட்டு அதிகவிலைக்கு விற்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மறுபுறம் இதை முற்றிலும் மறுத்து வாதிட்ட மாநில நீர்வள மேலாண்மை முகமை, சிப்காட் நிறுவனம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசுக்குழு புள்ளிவிவரங்களுடன் பல தகவல்களை முன்வைத்திருந்தனர். அந்த தகவலின்படி தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை காலங்களில் கிடைக்கும் மழைநீரே தாமிரபரணி ஆற்றின் நீர் ஆதாரம் எனவும் கடந்த 30 ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துள்ள சராசரி மழைநீர் அளவு 841 மி.மி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாமிரபரணி ஆற்றுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து சுமார் 17,482.80 கன அடி தண்ணீரும் கிளை ஆறுகள் மூலமாக 22,000.80 கன அடி நீர் ஆண்டுக்கு பெறப்படுகிறது. இப்படி மொத்தம் 39,483.60 கன அடி நீர் தாமிரபரனி ஆறுக்கு கிடைக்கின்றது. இதில் சாகுபடிக்கு தேவையான நீர் 25,506.68 கன அடி தண்ணீர் மட்டுமே எனவும் குடிநீர் பயன்பாடு மற்றும் தொழில்துறை பயன்பாடு உள்ளிட்டவைக்கு 8,957.83 கன அடி நீர் ஒதுக்கப்பட்டுவருகிறது எனவும் குறிப்பிட்ட அவர்கள் மீதமுள்ள உபரி நீரான 5,049.09 கன அடி நீர் கடலில் வீணாக கலக்கின்றது எனவும் புள்ளிவிவரங்களை சமர்பித்துள்ளனர். இதை உறுதிசெய்யும் வகையில் 2014- 2015 ஆம் ஆண்டுக்கான தாமிரமரணி ஆற்றின் நீர்வரத்து மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அரசு நடத்திய மறுஆய்வறிக்கையையும் சமர்பித்திருந்தனர்.
இந்த ஆய்வின்படி 2014-2015 ஆம் ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றின் மேற்பரப்பின் மூலம் கிடைத்த நீரின் அளவு 31,190 கன அடி எனவும் ஆற்றின் நிலத்தடியின் மூலம் கிடைத்த நீரின் அளவு 36,355 கன அடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-2015 ஆண்டுகளின் படி 56,744 கன அடி நீர், பாசன நிலங்களுக்கு தேவையாக இருந்த நிலையில் தாமிரபரணியின் நிலத்தடி மற்றும் மேற்பரப்பின் மூலமாக மட்டும் மொத்தம் 67,545 கன அடி நீர் கிடைத்துள்ளதாகவும், இதில் தேவை போக 16 சதவீத தண்ணீர் உபரியாக கிடைத்துள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்பையாகக் கொண்டுதான் பொதுநல மனுதாரர்களின் முன்வைத்திருந்த கருத்துக்களை அரசு மறுத்துள்ளது.
மேலும் உபரிநீரில் சுமார் 3 லட்சத்து 78 ஆயிரம் லிட்டர் நீர் வரை தாமிரபரணியில் இருந்து சிப்காட் மூலம் பெறப்பட்டு அங்குள்ள தொழில் சார்ந்த நிலங்களுக்கு அளிக்கலாம் என அரசு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிர்ணயிக்கப்பட்டதில் வெறும் 20 சதவீத நீரையே நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விளைச்சலுக்கு பயன்படுத்தப்படும் நீர் போக உபரியாக கிடைக்கும் நீரில் வெறும் 0.8 சதவீதம்தான் பெப்சி மற்றும் கோக் நிருவனங்களுக்கு வழங்கப்படுவதாகவும் அரசு தரப்பில் புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியை சார்ந்துள்ள பகுதிகளில் இதுவரை நீர் பற்றாக்குறை ஏற்படாத நிலையில் இன்னும் பருவமழை பெய்யும் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருவதாகவும் ஒருவேளை நீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் இதுவரை பெய்துள்ள மழை மிகவும் குறைவானது எனவும், இது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு எனவும் அரசு தெரிவித்துள்ளது.
அரசு சமர்பித்த இந்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்த நீதிபதிகள், தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீரை வழங்குவதன் மூலமாகதான் தாமிரபரணியை சார்ந்துள்ள பகுதிகளில் நீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்ற கருத்தை தெரிவித்தனர். மேலும் உபரியாக கிடைக்கும் நீரின் பெரும்பகுதியானது மற்ற நிறுவனங்களுக்கு செல்லும்போது பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களை மட்டும் காரணம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
source: news 7 , http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/6/3/2017/why-did-hc-dismiss-cases-against-water-supply-soft-drink-copackers