
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள அமைச்சரை இதுவரை ஏன் பதவியில் இருந்து நீக்கவில்லை என உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்-க்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் காயத்ரி பிரஜாபதி தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததையடுத்து உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியது.
மேலும், அமைச்சர் காயத்ரி பிரஜாபதி ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.
இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவக்கு ஆளுநர் ராம்நாயக் ஒரு கடிதம் எழுதியுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரஜாபதியை இன்னும் அமைச்சரவையில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன என விளக்கம் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
source: news7