ஞாயிறு, 19 மார்ச், 2017

உமா பாரதிக்குப் பிறகு மீண்டும் ஒரு சாமியார். முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் உ.பி. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்

உமா பாரதிக்குப் பிறகு மீண்டும் ஒரு சாமியார்… உ.பி. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தேர்வு…
கடும் போட்டிக்கிடையே உத்தரபிதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு ஆதரவுடன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட யோகி ஆதித்யநாத் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டபேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 312 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. பா.ஜ.க.னதா கூட்டணி ஒட்டு மொத்தமாக 325 இடங்களை கைப்பற்றியது.
மத்திய அமைச்சர்கள்  ராஜ்நாத்சிங், மனோஜ்சின்கா, மகேஷ் சர்மா மற்றும் உத்தர பிரதேச மாநில பா.ஜ.க.
 
தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, லக்னோ மேயர் தினேஷ் சர்மா ஆகியோர் முதலமைச்சர் பதவிக்கான  போட்டியில் இருந்தனர். 

புதிய முதலமைச்சரை  ஒருமனதாக தேர்வு செய்ய பா.ஜ.க.மேலிடம் முடிவு செய்தது. ஆனால் கடும் போட்டி நிலவியதால் முதலமைச்சரை  தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து பா.ஜ.க. எம்எல்ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அதில் முதலமைச்சரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடனும் பா.ஜ.க. தலைமை ஆலோசனை நடத்தியது. 
பரபரப்பான இந்த சூழ்நிலையில் லக்னோவில் இன்று பா.ஜ.க. எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத் புதிய முதலமைச்சராக  தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து  யோகி ஆதித்யநாத் ஆளுநரைச் சந்தித்து  ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுக்க உள்ளார். நாளை மாலை புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

source:kaalaimalar

Related Posts: