
மோடி தலைமையிலான பாஜக அரசு பெரிய பணக்காரர்களின் கடனைத் தள்ளுபடி செய்வதாகவும், அதே நேரத்தில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சோன்பத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.
அப்போது, நாட்டில் மிகப்பெரும் பணக்காரர்கள் ஐம்பது பேரின், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளதாகவும், அதேநேரத்தில் ஏழை விவசாயிகளின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்ய மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதாக நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியையும் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வட்டாரத்திலும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்தார்.
source: news 7