வியாழன், 31 ஜனவரி, 2019

தமிழகத்தில் முதன்முறையாக ரோபோ லேப் மாநகராட்சிப் பள்ளியில் அறிமுகம்! January 31, 2019

Image
தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளியில் ஸ்டெம் (STEM) கல்வி முறையில் ரோபோ ஆய்வகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மாணவர்களின் அறிவியல் ஆற்றல் என்பது வயது வித்தியாசமின்றி வெவ்வேறுவிதமாக வெளிப்பட்டு வருகிறது.  வளர்ந்துவரும் உலக நாடுகளுக்கு இணையாக தமிழக மாணவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்தும் வகையில், இந்திய - அமெரிக்க ஒருங்கிணைப்பு தனியார் நிறுவனம் ஒன்றோடு ரோபா ஆய்வகத்தை மதுரை மாநகராட்சி முதல் முறையாக தொடங்கியுள்ளது. 
தமிழகத்தில் முதன்முறையாக ஸ்டெம் கல்வி முறையில் 13.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தத்தனேரி திருவிக பள்ளியில் இந்த ஆய்வகம், தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த ரோபோ ஆய்வகம் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்டவைகள் குறித்த கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த ரோபோக்கள் அனைத்திற்கும் மாணவர்கள் தாங்களாகவே புரோகிராம்களை உருவாக்குதுடன், அதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து பயன்படுத்துகின்றனர்.
பல்வேறு நாடுகளில் வயது வித்தியாசமின்றி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் இந்த புதிய முயற்சி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களின் கணிணி அறிவியலை மேம்படுத்தும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. 
 
தற்போது தொழில்துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த இந்த பயிற்சியை அரசு இலவசமாக கற்றுத் தருவது மாணவர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ns7.tv