21/3/2017 தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் பற்றி அன்று முதல் இன்று வரை கடந்து வந்த பாதை..
►1956ல் இந்தியாவில் முதன் முதலாக நியூட்ரினோ, கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
►2002ல் மத்திய அணுசக்தித் துறையிடம் நியுட்ரினோ திட்டம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
►2009ல் சுற்றுச்சுழல் துறை நியுட்ரினோ திட்டத்திற்கு அனுமதி மறுத்தது.
►2010ல் தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்தது.
►2012ல் நியுட்ரினோ திட்டத்துக்கான நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
►2015ல் நியுட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
►2015ம் ஆண்டில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வைகோ வழக்கு தொடர்ந்தார்.
►2015ம் ஆண்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து உரிய அனுமதி பெறும்வரை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்ற கிளை தடை விதித்தது
►2015ம் ஆண்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
►2016ல் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது.
►2017ல் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.