செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழகத்தின் 5 இடங்களில் நேற்று 100 டிகிரியை தாண்டிய வெப்பம்

தமிழகத்தின் 5 இடங்களில் நேற்று 100 டிகிரியை தாண்டிய வெப்பம்


21/03/2017, தமிழகத்தின் 5 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. 

நேற்று மாலை நிலவரப்படி கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக திருச்சி, சேலம் மற்றும் மதுரையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. 

தர்மபுரியில் 100 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவானது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். 

கடல்காற்று இல்லாமல் நிலக்காற்று வீசவதாலும், மேகங்கள் உருவாககாததாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனிடைய வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் ஆங்காங்கே மழை பதிவாகி இருக்கிறது.

Related Posts: