டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் படித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரிசிப்பாளையம் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள மருதநாயகம் தெருவை சேர்ந்த ஜீவானந்தம் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முத்துகிருஷ்ணன் ஹைதராபாத் பல்கலைகழகத்தில் எம்.ஃபில் முடித்து விட்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நவீன வரலாறு என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் டெல்லியில் முனிர்கா விஹார் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்குச் சென்ற முத்துகிருஷ்ணன் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறேன் என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் கதவு திறக்கப்படாதையறிந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது முத்துகிருஷ்ணன் மின் விசிறியில் பிணமாகத் தொங்கியபடி காட்சியளித்தார்.
இந்த சம்பவம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
174 சிஆர்பிசி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துகிருஷ்ணன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதிய கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிய போலீசார் சில தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக முத்துகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறினர்.
முத்துகிருஷ்ணன் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.