புதன், 22 மார்ச், 2017

​தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க கோரிய வழக்கு! March 22, 2017

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிய வழக்கில், நெல்லை மாநகர ஆணையர் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் முத்துராமன் தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தென் தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில், தொழிற்சாலைகள், மற்றும் மாநகரத்தின் கழிவு நீர் கலப்பதால் ஆற்று நீர் மாசுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அதிக அளவில் கழிவு நீர் கலப்பதால் தூர்நாற்றம் வீசுவதாகவும், ஆற்று நீர் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காத நெல்லை மாநகர ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் முத்துராமன்  கோரியிருந்தார். 

இந்த மனு நீதித்துறை நடுவர் ஜோதிமணி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் பி.எஸ்.ராவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெல்லை மாவட்ட சுற்றுப்புற சூழல் பொறியாளர், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Related Posts: