புதன், 22 மார்ச், 2017

பான் கார்டு பெறவும் இனி ஆதார் கட்டாயமாகிறது! March 22, 2017

பான் கார்டு பெறவும் இனி ஆதார் கட்டாயமாகிறது!



பான் கார்டு பெறவும், வருமான வரி செலுத்தவும் இனி ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதுவரை, பொது விநியோகத் திட்டம், பயிர் காப்பீடு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றுக்கு ஆதார் எண் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பான் கார்டு பெறுவதற்கும், வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு அடுத்த நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts: