வியாழன், 23 மார்ச், 2017

இனி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தேன் என்று யாரும் பொய் சொல்ல முடியாது! March 22, 2017




நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு இனி ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உலகளவில் மலையேறும் சாகச செயல்களில் சுற்றுலாப்பயணிகள் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அதைப்போல இந்தியாவில் உள்ள இமயமலை மற்றும் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றில் பலர் ஏறுவது வழக்கம். ஆனால் சாகச பயணிகள் சிலர் சிகரத்தின் உச்சியை அடையாமலே, உச்சியை அடைந்ததாக கூறிவருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தை ஏறுபவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி கொடுக்கும்  திட்டம் செயலுக்கு வரப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததும் சாகச பயணிகள் உச்சியில் எடுத்த புகைப்படத்தை அதிகாரிகளுக்கு அளித்து உறுதி செய்துகொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சாகசகாரர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்குவது ஒரு சோதனை முயற்சி என்றும் இந்த முயற்சி வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு முதல் இருந்து நிரந்தரமாக்கப்படும் என்று நேபாள சுற்றுலா துறை அதிகாரி துர்கா தத்தா தாக்கல் தெரிவித்துள்ளார். 

இந்த முறையின்படி பயணிகள் காத்மாண்டு வந்தடைந்தபிறகு அவர்களது அசைவுகள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் எதேனும் பிரச்சனையில் சிக்கிக்கொண்டால் அவர்களை காப்பாற்ற மீட்பு குழுவை அனுப்புவதற்கும் வசதியாக இருக்கும் என்றும் சுற்றுலா துறை அதிகாரி துர்கா தத்தா தாக்கல் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த தம்பதியர், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததாக புகைப்படங்களின் மூலம் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அந்த புகைப்படங்களை ஆராய்ந்த அதிகாரிகள் அது போலியானது என கண்டறிந்து அந்த தம்பதிகள் மலையேறுவதற்கு 10 ஆண்டுகள் தடைவிதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.