பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என அந்நாட்டு பிரதமர் தெரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற கட்டடத்தில் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இத்தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது என தெரிவித்த தெரசா மே உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்றத்தில் இருந்த தங்களை இத்தாக்குதலில் இருந்து காப்பாற்றிய காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதனால் தங்களது இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கவில்லை எனவும், இன்று வழக்கம்போல் நாடாளுமன்றத்துக்கு வருவதாகவும் தெரிவித்தார்.