வியாழன், 23 மார்ச், 2017

தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு? March 22, 2017

தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?


மாநிலங்களில் வசூலிக்கப்படும் மத்திய வரிகளில் மொத்த தொகையிலிருந்து 
மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப் படுகிறது. 


2014 -15 மத்திய வரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைத்த பங்கு ரூ 16 ஆயிரத்து 824 கோடியாக இருந்தது. 

அடுத்து 2015-16 ஆண்டு 20.98 % அதிகரிப்புடன் ரூ 20.354 ஆயிரம் கோடியாக உயர்ந்தது ஆனால் மத்திய வரி வருவாயின் அனைத்து இந்திய நிகர வளர்ச்சியான 18 % கணக்கீட்டு குறைத்துக் கொண்டால், மத்திய வரியிலிருந்து தமிழகத்திற்கு 2.98 % அளவு மட்டுமே கூடுதல் நிதியாகக் கிடைத்துள்ளது. 

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் நிதி வருவாய் அதிகரிப்பு விகிதம் மட்டுமே ஒற்றை இலக்கில் உள்ளது. மேலும் மத்திய வரியில் அதிக பட்ச நிகர வளர்ச்சி 69.92 % சத்தீஸ்கருக்கு கிடைத்துள்ளது.