புதன், 22 மார்ச், 2017

ரொக்கப் பரிமாற்றத்துக்கான உச்ச வரம்பை குறைக்க மத்திய அரசு முடிவு! March 22, 2017

ரொக்கப் பரிமாற்றத்துக்கான உச்ச வரம்பை குறைக்க மத்திய அரசு முடிவு!


ரொக்கப் பரிமாற்றத்துக்கான உச்ச வரம்பை 2 லட்சம் ரூபாயாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகையை அபராதமாக விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

பட்ஜெட் தாக்கலின்போது 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாதென மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். அவ்வாறு பரிவர்த்தனை செய்தால் அதே அளவு தொகை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ரொக்கப் பரிமாற்றத்துக்கான உச்ச வரம்பை 2 லட்சம் ரூபாயாக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த தகவலை மத்திய வருவாய்த் துறைச் செயலாளர் ஹஸ்முக் அதியா, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.