உலகளவில் கிராமங்களில் வசிப்பவர்களில் சுத்தமான குடிநீர் இல்லாதவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இந்திய கிராமங்களில் சுமார் 6.3 கோடி பேர்
சுத்தமான குடிநீர் வசதியின்றி இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அதாவது இந்திய மக்கள் தொகையில் 7 % பேருக்குச் சுத்தமான குடிநீர் வசதி இல்லை.
உலக அளவில் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் மொத்த மக்கள் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் மொத்தம் 66.3 கோடி பேர் சுத்தமான குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் இந்தியாவில் உள்ள கிராமங்களில்
வாழ்பவர்கள். சுத்தமான குடிநீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்தால் கிராமங்களில் வாழும் பெண்களின் தினசரி வாழ்க்கை
பெரிதும் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக குடிநீர் எடுக்கச் செல்லும் பெண் குழந்தைகளின் கல்வி பாதிப்புள்ளாகியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையின் படி 2050ல் உலகில் 40 சதவிகிதம் பேர் சுத்தமான குடிநீர் இன்றி தவிப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஆண்டுக்கு 3 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் தண்ணீர் பிரச்சனைகளால் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் ஊட்டச்சத்தின்மை குறைபாடு வியாதிகள் 50 % மேல் அதிகரித்திருக்கிறது.