ஜனநாயக போராளி இரோம் சர்மிளா தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் நிரந்தரமாக தங்குவதற்கு முடிவு எடுத்துள்ளார். மேலும் 2 மாதத்தில் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை திரும்ப பெற கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போரட்டம் இருந்து வந்த இரோம் சர்மிளா,கடந்த ஆகஸ்ட் மாதம் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் ஓக்ராம் இபோபியை எதிர்த்து போட்டியிட்ட இரோம் சர்மிளா படுதோல்வி அடைந்தார்.
இதையடுத்து அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் நிரந்தரமாக தங்குவதற்கு முடிவு எடுத்துள்ளார். மேலும் 2மாதத்தில் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த இரோம் சர்மிளா கொடைக்கானலில் நிரந்தரமாக தங்க போவதாகவும், அமைதியான அழகான சூழல் நிலவுவதால் இங்கு தங்க முடிவு எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் நுழைவில் தமக்கு ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்துள்ளது எனவும், குறிப்பாக எந்த அரசியல் திட்டமும் என்னிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் இரண்டு மாதத்தில் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை திருமணம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.