சண்டிகார்,
கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி கடந்த புதன் கிழமையில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். உண்ணாவிரதம் இருக்கும் 11, 12-ம் வகுப்பும் படிக்கும் மாணவிகள் மூன்று கிலோ மீட்டர் தொலைவு சென்று கான்வாலியில் நாங்கள் படிக்க வேண்டியது உள்ளது. நாங்கள் செல்லும் போது ஈவ்-டீசிங் தொல்லைக்கு ஆளாக வேண்டியது உள்ளது, பயம் அதிகமாக உள்ளது என கூறிஉள்ளனர்.
இது தொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதனை அவர் அதிகாரிகளிடம் எடுத்து சென்று உள்ளார், ஆனால் எந்தஒரு சாதகமாண பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் சவுகான் பேசுகையில், “ மாணவிகள் பள்ளி செல்லும் வேலையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் தலை கவசம் அணிந்து செல்லும் ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார்கள், இதனால் மாணவிகள் அச்சம் கொண்டு உள்ளனர்,” என கூறிஉள்ளார்.
பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கையே உள்ளது, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த எங்களுக்கும் விதிமுறைகள் உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறிஉள்ளார். போலீஸ் அதிகாரி சங்கீதா காலியா பேசுகையில், “இது தொடர்பாக எங்களுக்கு எந்தஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை. அவர்களிடன் நான் பேச முயற்சி செய்கிறேன், அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்றார். இதே ரேவாரி மாவட்டத்தில் கடந்த வருடம் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு கிராம மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.