ராணுவ வீரர் இல்லத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் வருகைக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் அவர் போன பின்பு திருப்பி எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிரேம் சாகர் என்ற ராணுவ வீரரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியது. இதையடுத்து பிரேம் சாகரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அவர் இல்லத்துக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே முதல்வரின் வருகையை அறிந்த அதிகாரிகள் பிரேம் சாகரின் இல்லத்துக்கு செல்லும் வழியில் புதிய சாலை அமைத்துள்ளனர். மேலும் பிரேம் சாகரின் வீட்டில் புதிய சோபா, ஏ.சி, தரை விரிப்புகள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் வாங்கித் தந்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த முதலமைச்சர் ஆதித்யநாத் பிரேம் சாகரின் குடும்பத்துக்கு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். ஆனால் முதல்வர் சென்ற பின்பு, அரை மணி நேரத்தில் ஏ.சி, சோபா உள்ளிட்ட அனைத்தையும் திருப்பி கொண்டு சென்றுள்ளனர் அதிகாரிகள்.